தங்கம் வென்று சாதனைப் படைத்த தென்காசி மாணவி…

Asianet News Tamil  
Published : Dec 12, 2016, 12:27 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
தங்கம் வென்று சாதனைப் படைத்த தென்காசி மாணவி…

சுருக்கம்

தென்காசி,

தென்காசியைச் சேர்ந்த மாணவி, சிறப்புநிலை யோகா போட்டியில் முதல் பரிசு பெற்று, தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இதன்மூலம் அவர், காமன்வெல்த் போட்டியில் பங்கு பெறும் தகுதியைப் பெற்றுள்ளார்.

அமெச்சூர் ஆசியன் யோகா கழகம் மற்றும் உலக யோகா பெடரேசன் அமைப்பு சார்பில் ஆசியன் யோகா போட்டிகள் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது.

இதில் 12 வயது முதல் 15 வயது வரை உள்ள பெண்கள் பிரிவில் தென்காசி புனித மிக்கேல் பள்ளி மாணவி நந்தினிதேவி சிறப்பு நிலை யோகா போட்டியில் முதல் பரிசு பெற்று தங்க பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் பங்கு பெறும் தகுதியை மாணவி நந்தினிதேவி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையை படைத்த மாணவி, யோகா ஆசிரியர் குருகண்ணன் ஆகியோரை அமைச்சர் இராஜலட்சுமி, பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர், பொது மக்கள் என அனைவரும் பாராட்டினர்.

PREV
click me!

Recommended Stories

மகளிர் உரிமைத் தொகை: பெண்களுக்கு ரூ.2,500 எப்போது? விஜய் அரசு குட்நியூஸ்!
MGR, ஜெயலலிதா, அல்ல நீங்கள்! ஆணவத்தால் அதிமுக வாக்குகள் தவெகவுக்கு.. EPS விளாசும் முன்னாள் நிர்வாகி