பட்டாசு விற்பனைக்கு தடை; மீறினால் கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை…

First Published Sep 27, 2017, 8:05 AM IST
Highlights
cracker sale is prohibited


திருவண்ணாமலை

செங்கம் பகுதியில் தீபாவளி விழாவையொட்டி அமைக்கப்பட்டும் பட்டாசு விற்பனைக் கடைகளில் சீனப் பட்டாசுகளை விற்க தடை செய்யப்பட்டுள்ளது என்றும், மீறினால் கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்..

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம், புதுப்பாளையம், சாத்தனூர், இறையூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பட்டாசு விற்பனைக் கடை உரிமையாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் செங்கம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரமூர்த்தி, “பட்டாசு விற்பனைக் கடை உரிமையாளர்கள் பட்டாசு விற்பனை உரிமத்தை முறையாக வைத்திருக்க வேண்டும்.

அளவுக்கு அதிகமான பட்டாசுகளை இறக்குமதி செய்யக்கூடாது.

பட்டாசு விற்பனையால் மக்களுக்கும், வியாபாரிகளுக்கும் இடையூறுகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பட்டாசுக் கடை முன் மணல், தண்ணீர் உள்ளிட்ட தீ தடுப்பு பாதுகாப்பு பொருள்களை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். கடை முன் கண்காணிக்க ஆள்களை நியமனம் செய்துகொள்ள வேண்டும்.

சீனப் பட்டாசுகளை விற்க தடை போடப்பட்டுள்ளது. மீறி விற்பனை செய்தால் கடை
உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், கடை உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரித்தார்.

இந்தக் கூட்டத்தில் செங்கம் காவல் ஆய்வாளர் கர்ணன், மேல்செங்கம் ஆய்வாளர் பூபதி, மகளிர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பூங்கொடி உள்ளிட்ட காவலாளர்கள் மற்றும் பட்டாசுக் கடை உரிமையாளர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

click me!