உணவுப் பொருட்களில் கலப்படம் செய்து விற்றால் கடும் நடவடிக்கை…

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 01:29 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
உணவுப் பொருட்களில் கலப்படம் செய்து விற்றால் கடும் நடவடிக்கை…

சுருக்கம்

 

உணவு பொருட்களில் கலப்படம் செய்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் செல்வராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திருவாரூரில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் இனிப்பகம் மற்றும் பேக்கிரி தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் செல்வராஜ் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர், “இனிப்பகம் மற்றும் பேக்கிரி தயாரிப்பாளர்கள், தங்களது பொருட்களில் அவசியம் காலாவதி தேதி குறிப்பிட வேண்டும். உணவு பொருட்கள் தயாரிப்பிற்கு பாதுகாக்கபட்ட தண்ணீரை பயன்படுத்திட வேண்டும். சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்யை மீண்டும், மீண்டும் பயன்படுத்த கூடாது. சுற்றுப்புறங்களை தூய்மையாக பராமரிக்க வேண்டும். பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளில் தயாரிப்பாளர் முகவரி, உற்பத்தி மற்றும் பயன்படுத்தும் கால அளவு அவசியம் இடம் பெற்றிட வேண்டும். உணவு தயாரிப்பிற்கு முந்திரி தோலை பயன்படுத்த கூடாது. உணவு பொருட்களில் கலப்படம் செய்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

இதில் திருவாரூர் நகரில் உள்ள இனிப்பகம் மற்றும் பேக்கிரி உரிமையாளர்கள், விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக உணவு பாதுகாப்பு அலுவலர் பால்சாமி வரவேற்றார். முடிவில் உணவு பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் நன்றி கூறினார்.

PREV
click me!

Recommended Stories

திமுகவில் நழுவும் பிடி..! திட்டம்போடும் கனிமொழி..! மட்டம் தட்டும் திமுக தலைமை..!
டெலிவரி ஊழியருக்கு சரமாரி வெட்டு.. சென்னையில் போதை கும்பல் வெறியாட்டம்.. ஷாக் வீடியோ!