பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்து உல்லாசமாக இருந்த மதபோதகர்…

Asianet News Tamil  
Published : Oct 21, 2016, 01:22 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
பெண்களை ஏமாற்றி பணமோசடி செய்து உல்லாசமாக இருந்த மதபோதகர்…

சுருக்கம்

 

நெல்லை,

வழிபாடு செய்வதாக கூறி இளம்பெண்களை விடுதிக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்ததுடன் அதை படம் பிடித்து மிரட்டி நகை, பணம் பறித்த மத போதகரை காவல்துறையினர் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் கருப்பூரை சேர்ந்தவர் டேவிட். இவருடைய மகன் ஜோசுவா இமானுவேல் ராஜ் (35). கிறிஸ்தவ மத போதகரான இவர், தனியாக ஒரு அறக்கட்டளையும் நடத்தி வருகிறார். இவர் ஊர், ஊராகச் சென்று கிறிஸ்தவ பிரசங்கம் மற்றும் ஜெபம் செய்து வருகிறார்.

இவர், ஜெபம் செய்ய செல்லும் ஊர்களில் அழகான இளம் பெண்களை பார்த்தால் அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வழிபாடு செய்வது போல் நடித்து அந்த வீட்டில் உள்ள இளம் பெண்களை தனது காதல் விலையில் வீழ்த்துவார். பின்னர் அந்த பெண்ணை வெளியூரில் நடக்கும் ஜெபக்கூட்டத்திற்கு வருமாறு கூறி தன்னுடன் அழைத்துச் செல்வார்.

பின்னர் விடுதியில் வைத்து சில பெண்களை ஆபாச படம் எடுத்து இண்டர் நெட்டில் போடுவதாக மிரட்டி பாலியல் பலத்தகாரம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

மத போதகரால் பாதிக்கப்பட்ட தாழையூத்து சேர்ந்த ஒரு இளம் பெண், கொடியன்குளத்தில் கணவரால் கைவிடப்பட்ட ஒரு பெண், பாப்பாக்குளத்தை சேர்ந்த ஒரு பெண் நெல்லை மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு விக்ரமனிடம் புகார் செய்தனர்.

அதன் அடிப்படையில் தாழையூத்து துணை காவல்துறை சூப்பிரண்டு பொன்னரசு, இன்ஸ்பெக்டர் தீன்குமார் ஆகியோர் மத போதகரை பற்றி தீவிரமாக விசாரணை நடத்தினர். அவர் ஆசை வார்த்தை காட்டி பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது. இதையடுத்து ஜோசுவா இமானுவேல் ராஜை காவல்துறையினர் புதன்கிழமை நள்ளிரவில் கைது செய்து, இரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் காவல்துறையினரிடம் கொடுத்த வாக்குமூலம் பின்வருமாறு:

“தாழையூத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் வீட்டுக்கு அடிக்கடி ஜெபம் செய்வதற்காக செல்வேன். உனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்றால், சிறப்பு ஜெபம் செய்ய வேண்டும். வெளியூர்களில் நடக்கும் கூட்டங்களுக்கு வந்தால் அரசு வேலை கிடைக்கும் என அந்த பெண்ணை ஆசை வார்த்தை காட்டி வெளியூருக்கு அழைத்து சென்றேன். வெளியூர்களில் வைத்து பல முறை அந்த பெண்ணிடம் உல்லாசம் அனுபவித்தேன். அதை செல்போன் மூலம் படம் எடுத்தேன்.

என்னைப் பற்றி வெளியே கூறினால், இந்த ஆபாச படத்தை இண்டர் நெட்டில் வெளியிட்டு உனது வாழ்க்கையை சீரழித்து விடுவோன் என்று மிரட்டினேன். பயமடைந்த அந்த இளம் பெண் நடந்த விசயத்தை யாரிடமும் கூறாமல் அமைதியாக இருந்து விட்டார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு அந்த பெண்ணை மிரட்டி அவர் அணிந்து இருந்த 10 பவுன் தங்க சங்கிலியை ஏமாற்றி அபகரித்துக் கொண்டேன்.

கொடிங்குளத்தில் ஒரு பெண் தனது கணவரை பிரிந்து இருப்பதை தெரிந்து கொண்ட நான், அவர் வீட்டுக்கு சென்றேன். சிறப்பு ஜெயம் மூலம் கணவனுடன் சேர்ந்து வைப்பதாக கூறி அந்த பெண்ணை மயங்கி உல்லாசம் அனுபவித்தேன். அந்த பெண்ணையும் செல்போனில் ஆபாச படம் எடுத்து மிரட்டி, அவரிடம் இருந்த 15 பவுன் தங்க சங்கிலியையும் அபகரித்தேன்.

பாப்பான்குளத்ரை சேர்ந்த ஒரு பெண்ணை வசதியாக வாழ வைப்பதாக கூறி ஏமாற்றி உல்லாசம் அனுபவித்தேன். அவரிடம் இருந்து 5 பவுன் தங்க நகைகளை ஏமாற்றி பறித்து கொண்டேன்”.

இவ்வாறு அவர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில் மதபோதகர் ஜோசுவா இமானுவேல் ராஜ் பல பெண்களை ஏமாற்றி, அவர்களிடம் இருந்து பண மோசடி செய்து உல்லாசமாக இருந்தது தெரியவந்துள்ளது.

மத போதகரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுக்கலாம் என்றும், அவர்கள் பெயர் இரகசியமாக வைக்கப்படும் என்று தாழையூத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் பல புகார்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட ஜோசுவா இமானுவேல் ராஜ் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

திமுகவில் நழுவும் பிடி..! திட்டம்போடும் கனிமொழி..! மட்டம் தட்டும் திமுக தலைமை..!
டெலிவரி ஊழியருக்கு சரமாரி வெட்டு.. சென்னையில் போதை கும்பல் வெறியாட்டம்.. ஷாக் வீடியோ!