விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்; மன வருத்தத்தில் கணவர் விஷம் குடித்து தற்கொலை...

 
Published : Feb 02, 2018, 10:08 AM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
விவாகரத்து வழங்கிய நீதிமன்றம்; மன வருத்தத்தில் கணவர் விஷம் குடித்து தற்கொலை...

சுருக்கம்

court give Divorce husband drink poison and dead

தேனி

தேனியில் நீதிமன்றம் விவாகரத்து வழங்கியதால் மன வருத்தத்தில் இருந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், கோட்டூரைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் கோபால் (32). இவர், கோட்டூரில் செயல்பட்டு வரும் மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி அழகு கணேஷ்வரி. இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், கோபால், அழகு கணேஷ்வரி இடையே இருந்துவந்த கருத்து வேறுபாடு பிரச்சனையில் விவாகரத்து கேட்டு தேனி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு பதிந்தனர்.  

வழக்கு விசாரணை  நடந்து வந்துள்ள நிலையில் இந்த கடந்த ஜனவரி 29-ஆம் தேதி கோபால், அழகு கணேஷ்வரி ஆகியோருக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதனால் கோபால் மிகுந்த மன வருத்தம் அடைந்துள்ளார். நீதிமன்றம் தங்களை சேர்த்து வைத்துவிடும் என்று காத்திருந்த கோபாலுக்கு, நீதிமன்றத்தின் தீர்ப்பு வெடிகுண்டு போட்டது போல இருந்துள்ளது.

இதனால், உப்பார்பட்டி விலக்கு பகுதியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண் டார். விவாகரத்து அளித்ததால் விஷம் குடித்து தற்கொலை கோபாலின் தந்தை முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில், வீரபாண்டி காவல் நிலைய காவலாளர்கள் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!