
தஞ்சாவூர்
தஞ்சாவூரில், கணவருடன் மோட்டார் சைக்கிளில் வந்துக்கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 10 சவரன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்ததில் தடுமாறியவர் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் கம்பட்ட விஸ்வ நாதர் கோவில் தெற்கு வீதியைச் சேர்ந்தவர் சம்பத்குமார் (46). இவர் சிதம்பரத்தில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பிரியதர்ஷினி (33).
இவர்கள் இருவரும் தைப்பூசத்தையொட்டி நேற்று முன்தினம் சுவாமிமலை கோவிலுக்குச் சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, தஞ்சை சாலையில் பேட்டை பிரதான சாலையில் வந்தபோது பின்னால் இரண்டு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் பிரியதர்ஷினியின் கழுத்தில் இருந்த 10 சவரன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
கொள்ளையர்கள், திடிரென பிரியதர்ஷினியில் கழுத்தில் இருந்த சங்கிலியை பறித்ததில் தடுமாறிய பிரியதர்ஷினி, மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் அடைந்தார்.
அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்ல் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த திருட்டுச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் கும்பகோணம் மேற்கு காவலாளர்கள் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.