என் மகனே போயிட்டா.. அப்புறம் எதுக்கு இந்த உசுரு.. சொத்து.. அக்னி தீர்த்த கடலில் விழுந்து தம்பதி தற்கொலை.!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் இன்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் புனித நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் முதியவர் மற்றும் மூதாட்டி சடலமாக மிதந்தனர். இதனைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். 


மகன் தற்கொலை செய்து கொண்டு இறந்த துக்கம் தாங்காமல் கணவன் மனைவி இருவர் உடலில் துணியை கட்டிக்கொண்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் இன்று அதிகாலை ஏராளமான பக்தர்கள் புனித நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் முதியவர் மற்றும் மூதாட்டி சடலமாக மிதந்தனர். இதனைக் கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மீனவர்கள் உதவியுடனு் கடலில் மிதந்த முதியவர் மற்றும் மூதாட்டியின் சடலங்களை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது, அவர்கள் இருவரும் கணவன்-மனைவி என்பது தெரிய வந்தது.

Latest Videos

அப்போது உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட ஆண் உடலில் அணிந்திருந்த சட்டையில் இருந்து கிடைத்த ஆதார் அட்டையை  வைத்து  போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில் கோவை மாவட்டம் சமத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (62), அவரது மனைவி தனலட்சுமி (59). ஆறுமுகம் பொள்ளாச்சி ஊரக வளர்ச்சி துறையில் பணியாற்றி கடந்த இரண்டு மாதத்திற்கு முன் ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி தனலட்சுமி காதி கிராப்ட்டில்  பணியாற்றி வந்தார் என்பதும் தெரியவந்தது.

கடந்த 3-ம் தேதி கோவிந்தராஜும், அவரது மனைவியும் ராமேஸ்வரம் வந்து தங்கியுள்ளனர். இவர்களது 23 வயது மகன் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மன உளைச்சலுக்கு ஆளான தம்பதியினர் தற்கொலை செய்ய முடிவு செய்தனர். தற்கொலை செய்வதற்கு முன்னதாக தனது உறவினர்களுக்கு செல்போனில் குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார். அதில், எனது சொத்தை விற்று என மகன்  பெயரில் அறக்கட்டளை துவங்கி மக்களுக்கு நல்லது செய்யுங்கள், அதற்கான ஆவணங்கள் வீட்டில் தயாராக வைத்துள்ளேன். நாங்கள் இருவரும் ராமேஸ்வரம் கடலில் விழுந்து தற்கொலை செய்ய போகிறோம் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து, இருவரும் துணியால் தங்களது உடலை கட்டிக்கொண்டு கடலில் மூழ்கி தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 

click me!