
தமிழ் மக்களின் கொண்டாட்டம் மிகவும் பிடித்திருக்கிறது, அதனால் இங்கு காலா படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்ததாக ஜப்பானில் இருந்து தமிழகம் வந்த தம்பதியர் கூறியுள்ளனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் காலா. தனுஷ் தயாரித்துள்ள இந்தத் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் ஹியூமா குரேஷி, ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
காலா திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காலா திரைப்படத்தை முதல் காட்சியிலேயே பார்க்க ஜப்பானில் இருந்து இன்று காலை 4.30 மணி காட்சியில் சென்னை ரோகினி தியேட்டருக்கு யசோதா மற்றும் அவரது மனைவி வந்திருந்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய ஜப்பான் தம்பதியர் முதலில் தமிழில் வணக்கம் கூறி பேசினர். காலா ரிலீஸ் ஆனது மிக்க மகிழ்ச்சி என்றனர். காலா திரைப்படம் உலகமெங்கும் ரிலீஸ் செய்யப்பட்டாலும், சென்னையில் இன்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது.
ஜப்பானில் உள்ள ஹொசகவில் 3 நாட்கள் கழித்து ஜூன் 10-அம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது. மேலும் பேசிய அவர்கள், எனக்கு தமிழ் மக்கள், அவர்களின் கொண்டாட்டம் மிகவும் பிடித்திருக்கிறது. அதனால் இங்கு முதல் காட்சியைப் பார்க்க வந்தேன் என்று கூறினர்.