
பச்சிளம் குழந்தைகளை தெருவில் வீசி எரியும் தாய் இன்றளவும் இருக்க தான் செய்கிறார்கள் என்பதற்கு உதராணம் தான் உத்திர பிரதேச மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம்
உத்திர பிரதேச மாநிலத்தில், காரில் இருந்தவாறே பெண் ஒருவர் குழந்தையை துணியால் சுற்றி ஒரு வீட்டின் வாசலில் வைத்து விட்டு செல்வது அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவாகி உள்ளது
அந்த வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் வீட்டு வாசலில் குழந்தை அனாதையாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
குழந்தையை மீட்ட அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்து உள்ளார்.
பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தையின் உடல் நிலை மோசமாக உள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
எத்தனையோ பேர் குழந்தை இல்லை என்று பல லட்சங்களை மருத்துவமனையில் செலவிட்டு வருகின்றனர். ஆனால் குழந்தை பாக்கியம் பெற்ற யாரோ ஒரு தாய் இந்த தவறி செய்து இருப்பது அனைவரின் மனம் பதபதக்க வைத்துள்ளது.