அதிர்ச்சி !! உயர்கல்வி தொடராத 8,588 மாணவர்கள்.. என்ன காரணம்..? ஆலோசனை வழங்க அரசு முடிவு..

By Thanalakshmi VFirst Published Sep 24, 2022, 12:42 PM IST
Highlights

தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, இதுவரை உயர்கல்வி படிப்புக்கு விண்ணப்பிக்காத 8,588 மாணவர்களை தொடர்புக்கொண்டு ஊக்கப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. 
 

சென்னையில் கடந்த மாதம் 26 ஆம் தேதி ஒருங்கிணைந்த பள்ளிகள் இயக்கம், மாநில திட்ட இயக்குனர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.     

இந்த ஆலோசனை கூட்டத்தில், கடந்த கல்வியாண்டில் பள்ளி படிப்பை முடித்தும், தற்போது வரை உயர்கல்வி தொடரமால் இருக்கும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும். மேலும்  இதற்கான காரணங்களை கண்டறிய வேண்டும். இதனை தடுக்கும் வகையில் போதிய வழிகாட்டு நெறிமுறைகளை வழங்க வேண்டும் என்று விவாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது உயர்கல்வி தொடராத மாணவர்களுக்கான ஆலோசனைகளை ஒருங்கிணைந்த பள்ளிகள் இயக்கம், மாநில திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ளார்.

மேலும் படிக்க:தமிழகத்தில் மொழிப்பெயர்ப்பாளர் பணிகளுக்கு எஸ்எஸ்சி தேர்வு.. எப்போது..? எங்கு..? விவரம் உள்ளே

அதில், "26.08. 2022 அன்று நடைபெற்ற கூட்டத்தின் போது பெறப்பட்ட மாணவர்களின் விவரங்களில் 8,588 மாணவர்கள் எவ்வித உயர்கல்விக்கும் விண்ணப்பிக்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இந்த  மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு  கொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கன் மற்றும் ஆலோசனைகள்  மாநிலத் திட்ட இயக்ககத்தில் இருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
 
இதற்கென கூட்டத்தில் பெறப்பட்ட விவரங்களில் கூடுதலாக மாணவர்களின் EMIS எண்,கல்வி மாவட்டம், மதிப்பெண், தொலைப்பேசி எண்  உள்ளிட்ட விடுபட்ட தகவல்களை பள்ளிகளிலிருந்து பெற்று வழங்க வேண்டப்படுகிறது.மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இப்பணியினை முன்னுரிமை அடிப்படையில் மேற்கொண்டு விவரங்கணை பெற்று உரிய படிவத்தில் மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு அனுப்பகேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:திருச்சியில் அக்டோபர் 9ம் தேதி வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை.. என்ன காரணம் தெரியுமா?

click me!