திருச்சியில் அக்டோபர் 9ம் தேதி வரை பொதுக்கூட்டம், ஊர்வலத்துக்கு தடை.. என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumar  |  First Published Sep 24, 2022, 12:09 PM IST

திருச்சி மாநகரில் இன்று முதல் வரும் அக்டோபர் மாதம் 9 ம் தேதி வரை, ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த தடை அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 


திருச்சி மாநகரில் இன்று முதல் வரும் அக்டோபர் மாதம் 9 ம் தேதி வரை, ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த தடை அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா, எஸ்.டி.பி.ஐ ஆகிய அமைப்புகள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், அஸ்ஸாம் உட்பட 13 மாநிலங்களில் நடைபெற்ற சோதனைகளில் 100-க்கும் மேற்பட்ட பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிக்க;- பட்டாக்கத்தியுடன் ரயிலில் பயணம் செய்தால் 10 ஆண்டு சிறை.. கல்லூரி மாணவர்களுக்கு ரயில்வே காவல்துறை எச்சரிக்கை.!

இதனிடையே, கோவையில் அடுத்தடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் அரங்கேறி வருவதால் தமிழகம் முழுவதும் தொடர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழ்நிலையில் திருச்சியில் ஊர்வலம், பொதுக்கூட்டம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்;- திருச்சியில் இன்று முதல் 15 நாட்களுக்கு அனுமதியின்றி  பொதுக்கூட்டம், ஊர்வலம் ஆகியவைகள் நடத்த விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41 ன் கீழ் திருச்சி காவல் ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதையும் படிக்க;- மின்வாரிய ஊழியர்களுக்கு குட்நியூஸ்.. இன்ப அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு..!

click me!