மதுபோதையில் ஸ்கார்பியோ காரை ஓட்டி 13 பேர் மீது மோதிச் சென்ற நபரை தட்டி தூக்கிய போலீசார்!!

By Dhanalakshmi G  |  First Published Sep 21, 2022, 9:35 AM IST

மதுபோதையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு 50 கி.மீ வரை  வெள்ளை நிற ஸ்கார்பியோ காரை ஓட்டி வந்த நபரிடம் போலீசார் விசாரணைன்மேற்கொண்டு வருகின்றனர்.
 


தஞ்சை - திருச்சி சாலையில் , திருச்சி நோக்கி வந்த வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் ஒன்று அசுர வேகத்தில் சென்றது. இந்த காரை ஓட்டி வந்த நபர் செங்கிப்பட்டி, வளம்பக்குடி , துவாக்குடி ,பாய்லர், திருவெறும்பூர், கைலாஷ் நகர் உள்ளிட்ட இடங்களில் 3பெல் ஊழியர்கள் உட்பட 13பேர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் ஆயில்மில் செக் போஸ்டில் போலீசாரின் தடுப்பு கட்டைகளை மீறி வந்த ஸ்கார்பியோ கார் அரியமங்கலம் பால்பண்ணை ட்ராபிக் சிக்னலில் சிக்கியது. 

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த  காந்தி மார்க்கெட் போலீசார் அந்த ஸ்கார்பியோ காரை மடக்கி பிடித்தனர். அதில் மதுபோதையில் காரை ஓட்டிவந்த நபரிடம் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தஞ்சை மாவட்டம் மெடிக்கல் காலேஜ் சேர்ந்த ஆரோக்கிய லூர்து நாயகம் என்பதும் , அதிக மது போதையில் 50 கி.மீ தூரம் காரை ஓட்டி வந்ததும்  தெரியவந்தது.

Tap to resize

Latest Videos

undefined

பாஜக மாவட்ட தலைவரை கைது செய்தது ஏன்..? திமுகவின் சர்வாதிகாரத்தனத்திற்கு விரைவில் முடிவு- அண்ணாமலை ஆவேசம்

காரின் முன்பக்க டயர் தேய்ந்து ரிம்முடன் அந்த காரை போதை ஆசாமி ஓட்டி வந்துள்ளார். மேலும், அந்த நபரை திருவெறும்பூர் போலீசில் ஒப்படைக்க போலீஸ் ஜீப்பில் ஏற்றிய போது என்னை முன்பக்க சீட்டில் உட்கார வையுங்கள் என சைக்கோ தனமான நடந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து அந்த நபரை திருவெறும்பூர் போலீசில் ஒப்படைத்தனர்.

இது குறித்து திருவெறும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கார் யாருடையது, இவன் மதுபோதையில் காரை ஓட்டி வந்தாரா அல்லது வேறு ஏதும் போதை வஸ்துக்களை உட்கொண்டு ஓட்டி வந்தாரா? எத்தனை பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளான்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்காகத்தான் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்..? ஓபிஎஸ் ஆதரவாளர் கூறும் புதுவித தகவல்

click me!