நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு - பேனர் வைத்து, பிரச்சாரம் செய்த ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கைது...

Asianet News Tamil  
Published : Feb 07, 2018, 08:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:55 AM IST
நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு - பேனர் வைத்து, பிரச்சாரம் செய்த ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கைது...

சுருக்கம்

Corruption charges against judges - retired electrician officer arrested who put banner and campaign...

தேனி

தேனியில் மூன்று நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறி பேனர் வைத்து, மக்களிடையே ஆதரவு கேட்டு பிரச்சாரம் செய்த ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரியை காவலாளார்கள் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் பி.டி.ஆர். காலனியைச் சேர்ந்தவர் வைரமணி (62). இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி.

மின்வாரியத்தில் நடந்த ஊழல் குறித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த இவர், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு உத்தமபாளையம் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், "2002-ஆம் ஆண்டு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து சுருளியாறு மின் நிலையத்திற்கு தண்ணீர் வரக்கூடிய இராட்சத குழாய் பராமரிப்பு பணியில் ஊழல் நடந்திருக்கிறது" என்று குறிப்பிட்டிருந்து அதிரடியாக குற்றம் சாட்டினார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், புகார் தொடர்பாக எந்தவித முகாந்திரமும் இல்லை  என்று  கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்தது. மேலும், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது.

இது தொடர்பாக தேனி தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் வைரமணி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இதுமட்டுமின்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், உத்தமபாளையம் நீதிமன்றத்தில் தனது மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்க கோரி மனுவும் கொடுத்துள்ளார். மேலும், நீதிபதிகள் மீது அவர் ஊழல் புகாரும் கூறிவந்தார்.

இதனைக் கண்டித்து, உத்தமபாளையத்தில் உண்ணாவிரதம் இருக்க அவருக்கு நாளை (அதாவது வியாழக்கிழமை) காவலாளர்கள் அனுமதித்திருந்தனர்.

இந்த நிலையில் உத்தமபாளையம், தேனியில் பணிபுரியும் மூன்று நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டை கூறி உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு பிளக்ஸ் பேனரை வைரமணி வைத்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உத்தமபாளையம் காவலாளர்கள், அங்கு சென்று பிளக்ஸ் பேனரை அகற்றினர். மேலும், அனுமதியின்றி பிளக்ஸ் போர்டு வைத்ததாக கூறி வைரமணி மீது வழக்குப்பதிந்தனர்.

அதனால், நாளை நடக்கிற உண்ணாவிரதத்துக்கு ஆதரவு கேட்டு, கூடலூர் பேருந்து நிலையத்தில் தரையில் உட்கார்ந்து மக்களிடம் வைரமணி பிரச்சாரம் மேற்கொண்டார். எனவே, அனுமதியின்றி, பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக வைரமணியை காவலாளர்கள் கைது செய்தனர்.

நீதிபதிகளை கண்டித்து பிரச்சாரம் செய்த ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தமபாளையத்தில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

கோவையில் 3.5 கோடி மதிப்புள்ள பூங்கா நிலம் ஆக்கிரமிப்பு.. மதில் சுவரை இடித்து கையகப்படுத்துங்க.. பொதுமக்கள் கோரிக்கை!
பிளம் கேக் யார் சாப்பிடுவது என தி.மு.க - த.வெ.க - வுக்கு போட்டி ! அண்ணாமலை அதிரடி பேட்டி