கொஞ்சம் மாத்தி யோசித்து கொரோனா வைரஸ் கம்மலை மதுரை நகைக்கடையில் வைத்துள்ளது, பெரும் பேச்சாக இருக்கிறது.
மதுரை: கொஞ்சம் மாத்தி யோசித்து கொரோனா வைரஸ் கம்மலை மதுரை நகைக்கடையில் வைத்துள்ளது, பெரும் பேச்சாக இருக்கிறது.
நம்மூர்காரர்கள் எப்போதுமே வித்தியாசமாக சிந்திப்பார்கள். அதிலும் மதுரக்காரய்ங்க என்றால் சொல்லவே வேண்டாம். அவ்வப்போது புதுசு, புதுசாக ஏதாவது செய்வதில் கில்லாடி.
இப்போது கொரோனா காலம் என்பதால் தங்களின் கற்பனை திறனை தட்டி விட்டுள்ளனர். மதுரையில் உள்ள நகை கடை ஒன்றில் கொரோனா வைரஸ் கம்மல் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாக மக்கள் திரண்டு அங்கே சென்றுள்ளனர்.
பிரபல நகைக்கடையில் தான் இப்படி வியாபார உத்தியை பயன்படுத்தி உள்ளனர். இந்த கொரோனா வைரஸ் கம்மலை அப்பகுதியில் உள்ள பெண்கள் வாங்க திரண்டு வந்ததாக கடை ஊழியர்கள் தெரவித்துள்ளனர். இந்த டிசைன் கம்மல் பெண்களிடையே வரவேற்பை பெற்றிருப்பதாகவும் அவர்கள் கூறி உள்ளனர்.
மக்கள் ஒரு விஷயத்தை வரவேற்றால் அதே போன்று சம்பவங்கள் தொடர்ந்து நடப்பது வாடிக்கை. இப்போதும் அப்படித்தான்….. இதே கொரோனா டிசைன் கம்மலை மற்ற நகைக்கடைகளும் பின்பற்ற ஆரம்பித்து இருக்கின்றன.