பி.இ அரியரா…? அதுவும் 20 வருஷமா…? அண்ணா பல்கலைக்கழகத்தின் 'செம' அறிவிப்பு

Published : Sep 24, 2021, 07:11 PM IST
பி.இ அரியரா…? அதுவும் 20 வருஷமா…? அண்ணா பல்கலைக்கழகத்தின் 'செம' அறிவிப்பு

சுருக்கம்

20 ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தித்திக்கும் அறிவிப்பு ஒன்றை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது.

சென்னை: 20 ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு தித்திக்கும் அறிவிப்பு ஒன்றை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு உள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. பொறியியல் கல்வித்துறையில் அதன் தனித்துவமே தனி. இந் நிலையில் அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு ஒரு சூப்பர் அறிவிப்பை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது.

20 ஆண்டுகளாக அரியர் வைத்திருக்கும் நபர் என்றால் உங்களுக்கு தான் இந்த அறிவிப்பு மிக பொருத்தம். 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரியர் வைத்துள்ள பொறியியல் மாணவர்கள் வரக்கூடிய நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடைபெற உள்ள செமஸ்டர் தேர்வில் விண்ணப்பித்து அரியர் தேர்வை எழுதலாம் என்று அறிவித்து உள்ளது.

அதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட மாணவர்கள் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். www.coe1.annauni.edu என்ற இணையதளத்தில் உரிய விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம், அதனுடன் கூடுதலாக 5000 ரூபாய் செலுத்த வேண்டும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

PREV
click me!

Recommended Stories

காரில் திமுக கொடியுடன்.. ஃபுல் மப்பில் போயி யாரையாவது சாக அடிக்கவா? இப்படி பேசிட்டு கேஸ் போடாத போலீஸ்
எடப்பாடி பழனிசாமிக்கு மொத்த அதிகாரத்தையும் தூக்கி கொடுத்த பொதுக்குழு உறுப்பினர்கள்.. இபிஎஸ் எடுப்பது தான் முடிவு..!