Tamilnadu corona : வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் அனைவரும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற வழிகாட்டுதல்களைக் கட்டாயம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா மூன்றாவது அலையின் பாதிப்பு கடந்த ஜனவரி மாதத்தில் தீவிரமாக இருந்தது. அதன்காரணமாக ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாத தொடக்கத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. மூன்றாவது அலையின் பாதிப்பு தீவிரமாக இல்லாத நிலையில் தமிழகம் உடனே இயல்பு நிலைக்குத் திரும்பியது. இதனிடையே நாட்டில் வைரஸ் பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
இதையும் படிங்க : EPS Vs OPS : எல்லாமே முடிஞ்சுபோச்சு.! அதிமுகவை கைப்பற்றும் இபிஎஸ்..தர்ம சங்கடத்தில் ஓபிஎஸ்
பல வாரங்களுக்குப் பின்னர், நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு 12 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. பாசிட்டிவ் விகிதம் அச்சமூட்டும் அளவுக்கு அதிகரிக்கவில்லை என்றாலும் கூட சில வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டிலும் அதே நிலை தொடர்கிறது. வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதால் அனைவரும் மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற வழிகாட்டுதல்களைக் கட்டாயம் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மக்கள் விதிகளைப் பின்பற்றுவதை உறுதி செய்யவும் டெஸ்டிக் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் மாஸ்க் அணிவதாலும், தடுப்பூசி போடுவதிலும் கொரோனவை தடுக்கலாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதையும் படிங்க : Thalapathy Vijay : எங்களின் ஒற்றை தலைமையே.! அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்.!