Ennore Gas Leakage : எண்ணூரில் வாயு கசிவால் பொதுமக்கள் மூச்சு திணறல்.!தொழிற்சாலையை மூட அதிரடி உத்தரவு

By Ajmal KhanFirst Published Dec 27, 2023, 10:47 AM IST
Highlights

சென்னை எண்ணூர் பகுதியில் கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தில் அம்மோனிய வாயு கசிவு காரணமாக அப்பகுதி மக்கள் மூச்சு விட சிரமப்பட்ட நிலைலில், அந்த  ஆலையின் செயல்பாடுகளை முழுவதுமாக நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

அம்மோனிய வாயு கசிவால் பொதுமக்கள் பாதிப்பு

மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சென்னை எண்ணூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து ஆயில் கசிவு ஏற்பட்டு வீடுகளுக்குள் புகுந்தது. இதன் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது தான் அந்த பாதிப்பில் இருந்து மக்கள் வெளியே வந்த நிலையில், நேற்று இரவு கோரமண்டல் என்ற தனியார் நிறுவனத்தில் இருந்து அம்மோனிய வாயு கசிவு ஏற்பட்டது. இதன் காரணமாக எண்ணூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் மூச்சு விட சிரமம் அடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்பட்டது. 

Latest Videos

ஆலையின் செயல்பாடு நிறுத்த உத்தரவு

மூச்சு திணறல் பாதிப்பு காரணமாக அந்தப் பகுதி மக்கள் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட தகவலில், நேற்று இரவு 11:30 மணியில் எண்ணூர் கோரமண்டல்   இன்டர்நேஷனல் லிமிடெட் ஆலையில் இருந்து அம்மோனியா ரசாயன காற்றில் கலந்ததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு மயக்க நிலை ஏற்பட்டது இதைத் தொடர்ந்து தற்போது அந்த தொழிற்சாலை அனைத்து பணிகளையும் தற்காலிய  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இந்த தொழிற்சாலையை ஆய்வு செய்வதற்காக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் குழு அனுப்பப்பட உள்ளதாக தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

எண்ணூர் அமோனியம் வாயு கசிவிற்கு காரணம் என்ன .? தற்போது வாயு கசிவு நிலை என்ன.? கோரமண்டல் நிறுவனம் விளக்கம்

click me!