விபத்தில் சிக்கிய கூட்டுறவு துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் கார்..! சுற்றுலா வாகனம் மோதியதால் பரபரப்பு

By Ajmal KhanFirst Published Dec 26, 2022, 10:19 AM IST
Highlights

சுனாமி தினத்தையொட்டி அஞ்சலி செலுத்த சென்ற கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ராதாகிருஷ்ணன் காயம் இன்றி தப்பினார்.

 ராதாகிருஷ்ணன் கார் மீது மோதிய வேன்

சுனாமி நினைவு தினம் தமிழகத்தில் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில்  பட்டினப்பாக்கத்தில் மீனவ குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்துவதற்காக உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தமது இனோவா காரில் வருகை புரிந்தார். பட்டினப்பாக்கம் இணைப்பு சாலை சந்திப்பில் வருகை தந்தபோது சென்னையில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி செல்லும் சுற்றுலா வாகனம் தவறுதலாக நேருக்கு நேர் மோதியதில் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் காரின் முன் பகுதி முழுவதுமாக சேதமடைந்தது. சுற்றுலா வாகனம் சாலையின் வளைவில் தவறாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக விவசாயியை நேரில் அழைத்து பாராட்டிய சுந்தர் பிச்சை.. என்ன காரணம் தெரியுமா?

காயமின்றி தப்பிய ராதாகிருஷ்ணன்

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த வித காயங்களும் இன்றி தப்பிய கூட்டுறவு துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், காரில் இருந்து இறங்கி சேதமான தனது காரை பார்வையிட்டார். மேலும் விபத்தை ஏற்படுத்திய சுற்றுலா வாகனத்தையும் தனது செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்தநிலையில் விபத்து காரணமாக அந்த பகுதி போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து  தாமாகவே சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்ததுடன் தொடர்ந்து சுனாமி தினத்தை ஒட்டி பட்டினப்பாக்கத்தில் கூட்டுறவுத்துறை செயலாளர் ராதகிருஷ்ணன் அஞ்சலி செலுத்தினார்.விபத்து நடந்த பகுதியில் இருந்து 200 மீட்டருக்குள் மெரினா காவல் நிலையம் இருந்தும் விபத்து குறித்தோ அல்லது போக்குவரத்து நெரிசலை சரி செய்யவோ எந்த ஒரு காவல்துறையினரும் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

எண்ணூர் கடலில் குளித்த வடமாநில இளைஞர்கள்..! ராட்சத அலையில் சிக்கி 4 பேர் மாயம் - மீட்பு பணி தீவிரம்

click me!