தமிழக விவசாயியை நேரில் அழைத்து பாராட்டிய சுந்தர் பிச்சை.. என்ன காரணம் தெரியுமா?

By vinoth kumarFirst Published Dec 26, 2022, 9:20 AM IST
Highlights

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரைச் சேர்ந்த செல்வ முரளி. இவர் கணினி மென்பொருள் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். குறிப்பாக விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்கள் ஒவ்வொரு விவசாயிகளையும்  சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு அரிசக்தி என்ற விவசாயம் சார்ந்த வார இதழ், ஆன்லைன் தளம் மற்றும் செயலியை உருவாக்கி நடத்தி வருகிறார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாயி ஒருவரை நேரில் அழைத்து கூகுள் நிறுவன சிஇஓ சுந்தர் பிச்சை பாராட்டியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூரைச் சேர்ந்த செல்வ முரளி. இவர் கணினி மென்பொருள் தொடர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். குறிப்பாக விவசாயம் சார்ந்த தொழில் நுட்பங்கள் ஒவ்வொரு விவசாயிகளையும்  சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தோடு அரிசக்தி என்ற விவசாயம் சார்ந்த வார இதழ், ஆன்லைன் தளம் மற்றும் செயலியை உருவாக்கி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த ஆண்டு இந்தியா முழுவதும் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஆப்  உருவாக்குபவர்களை 100 பேரைகூகுள் தேர்வு செய்து 6 மாத காலம் பயிற்சி அளித்தது.  இந்த 100 பேரில் ஒருவராக செல்வமுரளியும் இடம் பெற்றிருந்தார். இந்நிலையில், டெல்லிக்கு வரும் படி செல்வமுரளிக்கு திடீரென அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து, செல்வமுரளி டெல்லி  ஒபராய் ஹோட்டலுக்கு சென்றுள்ளார்.  அங்கு சென்ற போது சுந்தர் பிச்சையை பார்த்து செல்வமுரளி அதிர்ச்சி அடைந்தார். 

அப்போது விவசாயத்தில் தொழில்நுட்பத்தை புகுத்தும் செல்வ முரளியின் முயற்சிக்கு சுந்தர் பிச்சை பாராட்டி கை கொடுத்தார். இதை சற்றும் எதிர்பாராத செல்வமுரளி வியப்பில் திகைத்து போய் என்ன பேசுவது என்றே தெரியாமல் திகைத்துபோன அவரை தட்டி கொடுத்து உற்சாகப்படுத்தினார். பின்னர், செல்வமுரளியின் செயலி குறித்து விளக்குமாறு சுந்தர் பிச்சை கேட்டுக் கொண்டதை அடுத்து செல்வமுரளி அந்த செயலி குறித்து விளக்கினார். 

Thank you Sundar, for the memorable meeting. I understand how Google values agriculture. I thank especially for your time to advice us on Agrisakthi

My life started from a South Indian village - pic.twitter.com/1MpTLwsGZM

— in.selvamurali (@selvamurali1)

இதுகுறித்து செல்வமுரளி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- சுந்தர் பிச்சையை சந்தித்தது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம். அக்ரி சக்தி பணிகள் எவ்வாறு சென்று கொண்டிருக்கிறது? விவசாயத்திற்கு என்னவெல்லாம் தேவைப்படுகிறது, விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவை எங்கே பயன்படுத்தலாம் உள்ளிட்டவற்றை என்னிடம் கேட்டார் என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். 

click me!