குடித்ததோ 150 ரூபாய்க்கு..! அபராதமோ 20000 ரூபாய்.! என்ன சார் நியாயம்.! போலீசாருடன் வாக்குவாதம் செய்த இளைஞர்கள்

By Ajmal Khan  |  First Published Dec 26, 2022, 8:30 AM IST

சென்னை புதுவண்ணாரப்பேட்டை பகுதியில் மது அருந்தி வந்த இருசக்கர வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்த போலீசாரிடம் இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 


இளைஞர்கள் உற்சாகம்

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நண்பர்களோடு விருந்து கொடுத்தவர்கள் மது போதையில் போலீசாரிடம் நேற்று சிக்சியுள்ளனர். நேற்று மட்டும் 100க்குமேற்பட்டவர்கள் போலீசாரிடம் மாட்டி அபராதம் கட்டியுள்ளனர். இந்தநிலையில் சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் திருவொற்றியூர் பகுதிக்கு நண்பர்களுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு மது அருந்திக்கொண்டு புதுவண்ணாரப்பேட்டை அருகே உள்ள தங்களது வீட்டிற்கு செல்வதற்காக வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது இரு சக்கர வாகனத்தை மடக்கிய போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த இளைஞர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது மது அருந்தி இருந்ததால் அபராதம் விதித்தனர்.

Tap to resize

Latest Videos

அரசின் அறிவிப்பால் விவசாயிகளும், தொழிலாளர்களும் ஏமாற்றம்.! ஸ்டாலினுக்கு அவரச கடிதம் எழுதிய கே.பாலகிருஷ்ணன்

உற்சாகத்தில் இளைஞர்கள்

இதனால் ஆத்திரமடைந்த இளைஞர்கள் நாங்கள் சரக்கு அடித்ததே 150 ரூபாய்க்கு தான் ஆனால் அபராதமோ 20000 என்றால் எங்களால் எப்படி பணத்தை செலுத்த முடியும் அடிக்கடி இதுபோன்று அவரது விதித்து கொண்டே இருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று  போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்தபகுதியில்  பொதுமக்கள் சூழவே உடனடியாக காவல் கட்டுப்பாட்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த புது வண்ணாரப்பேட்டை போலீசார் ரகளையில் ஈடுபட்டிருந்த இளைஞர்களை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு குடிபோதையில் இருந்ததால்  எழுதி வாங்கி வைத்துக்கொண்டு அனுப்பினர் .

இதையும் படியுங்கள்

நேருவின் வாரிசு பேசுவதை கோட்சேவின் வாரிசுகளுக்கு கசக்கத்தான் செய்யும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

click me!