வெயிலின் தாக்கம் மக்களை வாட்டி வதைத்த நிலையில், திடீரென சென்னை முழுவதும் ஊட்டி போல் குளு,குளுவென மாறியுள்ளது பொதுமக்களை மகிழ்ச்சி அடையவைத்துள்ளது.
வாட்டி வதைத்த கோடை வெயில்
கோடை வெயிலானது தமிழகத்தை பொறுத்தவரை ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் முதல் வாரம் வரை நீடிக்கும், ஆனால் தற்போதும் கத்திரி வெயில் போல் வெயிலானது மக்களை வாட்டி வதைக்கிறது. தினந்தோறும் 100 டிகிரிக்கும் மேல் வெயில் சுட்டெரிப்பதாலும், அனல் காற்று வீசுவதால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள் முடிங்கி கிடக்கும் நிலையானது நீடித்தது. இந்தநிலையில் வெயில் தாக்கமானது வரும் நாட்களில் குறைய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு ஏற்றார் போல் சென்னையில் நேற்று இரவு முதல் தூரல் பெய்து வந்த நிலையில், இன்று காலை வாட்டி வதைக்கும் வெயிலுக்கு பதிலாக குளு, குளு வானிலையானது காணப்பட்டது. இதன் காரணமாக மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திடீரென மாறிய வானிலை
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறும்போது, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவாரூர், நாகை, நெல்லை, திருப்பூர் ஆகிய 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களிலும், வரும் 20, 21-ம் தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சில பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய, மிதமான மழைபெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்
மீண்டும் டாஸ்மாக் மரணம்! திருச்சியில் மது அருந்திய நண்பர்கள் இருவர் சாவு