திண்டுக்கல்லில் தொடர் மழை; அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள்...  

 
Published : May 26, 2018, 09:52 AM ISTUpdated : Sep 19, 2018, 02:25 AM IST
திண்டுக்கல்லில் தொடர் மழை; அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மகிழ்ச்சி வெள்ளத்தில் விவசாயிகள்...  

சுருக்கம்

continues Rain in dindukkal Farmers are happy dam fill

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும்  தொடர் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகரில் நேற்று மதியம் சுமார் ஒரு மணிநேரம் அடைமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.  

அதுமட்டுமின்றி, பழனி மற்றும்  கொடைக்கானல் மலைப் பகுதிகளிலும் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால், காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.  பழனிக்கு குடிநீர் வழங்கும் கோடைகால நீர்த்தேக்கமும் விரைவாக நிரம்பி வருகிறது.  

பழனியை அடுத்த வரதமாநதி அணைக்கு விநாடிக்கு 132 கனஅடி நீர் வரத்து உள்ளது.  66.47 அடி உயரமுள்ள இந்த அணையில் தற்போது 40 அடி உயரத்துக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது.  

அதேபோல, பாலாறு பொருந்தலாறு அணை, குதிரையாறு அணைகளிலும்  நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.  

அனைத்து அணைகளிலும் நீர்வரத்து நிரம்பி வருவதால் விவசாயிகளும், மக்களும் பெரும் மகிழ்ச்சியில் அடைந்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்
கரூரில் விஜய் கட்சியில் கூட்டமாக சேர்ந்த இஸ்லாமியர்கள்..! செந்தில் பாலாஜிக்கு டப் கொடுக்கும் மதியழகன்