சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க சம்மதம் – இரு நாட்டு பேச்சுவார்த்தையில் முடிவு...

 
Published : Mar 08, 2017, 09:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க சம்மதம் – இரு நாட்டு பேச்சுவார்த்தையில் முடிவு...

சுருக்கம்

Consented to the release of imprisoned fishermen - both countries decided in negotiations

தமிழக மீனவர் பிரிட்ஜோ சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்த்து இந்தியா மற்றும் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்வதும் அவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், பின்னர், தமிழக மக்கள் விடுவிக்க கோரி போராட்டம் நடத்துவதும் வாடிக்கையாக நடந்து கொண்டு வருகிறது.

இந்நிலையில், ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் தனுஷ்கோடி அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் தங்கச்சிமடத்தை சேர்ந்த டிட்டோ என்பவரின் படகின் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இதில் ராமேஸ்வரம் மீனவர் பிரிட்சோ என்பவர் துப்பாக்கிச் சூட்டால் கொல்லப்பட்டார். உடன் சென்ற மற்றொரு மீனவரும் இத்தாக்குதலில் காயமடைந்தார்.

இலங்கை கடற்படையின் இந்த அராஜகத்தைக் கண்டித்து தங்கச்சி மடத்தில் மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவர்கள் இரண்டு கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

அதில் ஒன்று துப்பாக்கி சூடு நடத்திய இலங்கை கடற்படை காவலரை கைது செய்ய வேண்டும். மற்றொன்று இலங்கை சிறையில் உள்ள தமிழக மீன்வர்களை விடுவிக்க வேண்டும்.

இதையடுத்து தமிழக மீனவர் துப்பாக்கி சூட்டிற்கும் இலங்கைக்கும் சம்பந்தமில்லை என இலங்கை அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.

பின்னர், பிரிட்ஜோவுடன் கடலுக்குள் மீனவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் இலங்கை கடற்படை மீது தமிழக போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.  

இந்நிலையில் இன்று இந்தியா மற்றும் இலங்கை உயரதிகாரிகள் மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் இரு நாடுகளும் சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய ஒப்புதல் அளித்துள்ளனர்.

இதனால் இலங்கை சிறையில் உள்ள 85 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யபடுவார்கள்.

 

PREV
click me!

Recommended Stories

திமுகவுக்கு பேரிடி... அதிமுகவுக்கு சவுக்கடி..! கூட்டணி பலமானால் விஜயே முதல்வர்..! அதிரடி சர்வே..!
கலைஞர் அரசு போக்குவரத்து கழகமாகும் அரசு போக்குவரத்து கழகம்..? பகீர் கிளப்பும் எச்.ராஜா