காங் – திமுக கூட்டணி அமோக வெற்றி – நாராயணசாமி உறுதி

Asianet News Tamil  
Published : Nov 19, 2016, 09:01 AM ISTUpdated : Sep 19, 2018, 01:51 AM IST
காங் – திமுக கூட்டணி அமோக வெற்றி – நாராயணசாமி உறுதி

சுருக்கம்

காங்கிரஸ் – திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்கான இடைத்தேர்தல் தற்போது நடந்து வருகிறது. இதில் காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் உள்பட பலர் போட்டியிடுகின்றனர்.

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாக்களிக்கின்றனர். அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட வந்த வேட்பாளர் நாராயணசாமி, “மக்கள் ஆர்வமுடன் வாக்களிக்கின்றனர். காங்கிரஸ் – திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என செய்தியாளர்களிடம் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 திட்டம்.. ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
உருகிய முத்துக்காளை! என் மனைவிக்கு உதவுங்க CM விஜய் அண்ணா.. கண்ணீர் கோரிக்கை!