
கேரளா செல்லும் ரயிலில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டதால் காட்பாடி ரயில் நிலையத்தில் கேரளா செல்லும் அனைத்து ரயில்களையும் போலீசார் நிறுத்தி சோதனையிட்டு வருகின்றனர்.
சென்னையிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருக்கும் ரயிலில்,வெடிகுண்டு இருப்பதாக சென்னை செண்டரல் ரயில் நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் ஒரு மர்ம பெண் பேசிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார்.
இதனால் பதற்றமடைந்த போலீசார் உடனடியாக திருவனனந்த புரம் செல்லும் ரயில் பற்றி தகவல் தெரிவித்தனர். அந்த ரயில் காட்பாடி அருகே சென்றுகொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து காட்பாடியில் அந்த ரெயிலை போலீசார் நிறுத்தினர்.
பின்னர், போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் , மோப்ப நாய் உதவியுடன் ரயில் முழுதும் சோதனை நடத்தினர். இதில், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை இதனால் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவல் பொய் என தெரியவந்தது. பின்னர், 45 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
ஆனாலும் கேரளா நோக்கி செல்லும் அனைத்து ரயில்களையும் போலீசார் சோதனையிட்டு வருகின்றனர். வெடிகுண்டு இருப்பதாக போனில் தகவகல் தெரிவித்த பெண் யார் என்ற விசாரணையும் நடந்து வருகிறது.