வாணிப தொடர்பு குறித்து பறைசாற்றும் தொல் பொருட்கள்.. அகழ்வாராய்ச்சியில் கண்டெடுப்பு

By Thanalakshmi VFirst Published Sep 22, 2022, 4:51 PM IST
Highlights

விருதுநகர்‌ மாவட்டம்‌ வெம்பக்கோட்டையில்‌ நடைபெற்று வரும்‌ அகழ்வாராய்ச்சியில்‌ சுடும்‌ மண்ணால்‌ ஆன முத்திரை, சங்கு வளையல்கள்‌, செப்பு காசு போன்ற அரிய வகை தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. 
 

விருதுநகர்‌ மாவட்டம்‌ சாத்தூர்‌ அருகே வெம்பக்கோட்டையில்‌ உள்ள வைப்பாற்று கரையில்  அமைந்துள்ள உச்சிமேட்டில்‌ 25 ஏக்கர்‌ பரப்பளவிலான தொல்லியல்‌ மேட்டில்‌ அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.

இங்கு கடந்த மார்ச்‌ 16 ஆம்‌ தேதி முதல்‌ 15 குழிகள் தோண்டப்பட்டு நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியில், இதுவரை சுடுமண்ணால்‌ ஆன பகடைக்காய்‌, தக்களி, ஆட்டக்காய்கள்‌, முத்துமணிகள்‌, சங்கு வளையல்கள்‌, பெண்‌ உருவம்‌, காளை உருவம்‌, கோடாரி, சுடு மண்ணால்‌ செய்யப்பட்ட விளையாட்டுப்‌ பொருள்கள்‌, தங்க அணிகலன்கள்‌, பொம்மமை உருவம்‌ கண்டறியப்பட்டுள்ளன.

மேலும் படிக்க:தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு அனுமதி . சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..

 

இந்நிலையில் இன்று அகழ்வாராய்ச்சியில் சுடும்‌ மண்ணால்‌ ஆன முத்திரை, சங்கு வளையல்கள்‌, ஆண்‌, பெண்‌ உருவம்‌ பொறித்த செப்பு காசு ஆகியவைகள்‌ கண்டறியப்பட்டுள்ளன. தற்போது கிடைத்துள்ள இந்த அரியவகை தொல் பொருட்கள் மூலம், இந்த பகுதியில்‌ வாழ்ந்தவர்கள்‌ வாணிப தொடர்பு வைத்திருக்கலாம் என்றும் அதன் மூலம் சங்குகளால்‌ ஆன அழகு பொருள்களையும்‌ பயன்படுத்திருக்கலாம் என்றும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.  மேலும்‌ இம்மாத இறுதி வரை இந்த அகழ்வாராய்ச்சி நடைபெறும்‌ என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் படிக்க:மருத்துவ படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு இன்று முதல் தொடக்கம்.. கலந்தாய்வு குறித்து முக்கிய தகவல்..

click me!