
ஒய்வு பெற வேண்டிய சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் பணிகாலத்தை நீட்டிப்பதற்கு தலைமை செயலக சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து தலைமை செயலக சங்கத்தினர் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:
2012 ஆம் ஆண்டு ஒய்வு பெற இருந்த நிலையில், சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதினுக்கு 5 ஆண்டு காலம் பணி நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
ஜமாலுதின் பதவியில் நீடிப்பதால் மற்ற அலுவலர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில்லை.
ஜமாலுதீனின் 5 ஆண்டு கால பணி நீட்டிப்பு வரும் மே மாதம் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதன் மூலம் கிடைக்காமல் இருந்த பதவி மற்றும் பதவி உயர்வு கிடைக்கும் என்று எத்ரிபர்த்த நிலையில், அவருக்கு மீண்டும் மூன்று ஆண்டு காலம் பணி நீட்டிப்பு செய்ய உள்ளதாக தெரிகிறது.
இதை எதிர்த்து முதலமைச்சரிடம் மனு அளித்தோம். இதை அறிந்து கொண்ட பேரவை செயலாளர் தங்களது சங்க நிர்வாகிகளை அழைத்து கடினமாக பேசியதுடன் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதற்கு தமிழக தலைமை செயலக சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.