விஜயபாஸ்கர் நண்பர் வீட்டில் தொடங்கியது விசாரணை - பதற்றத்தில் முக்கிய புள்ளிகள்

 
Published : May 10, 2017, 03:01 PM ISTUpdated : Sep 19, 2018, 03:16 AM IST
விஜயபாஸ்கர் நண்பர் வீட்டில் தொடங்கியது விசாரணை - பதற்றத்தில் முக்கிய புள்ளிகள்

சுருக்கம்

investigation in subramani house

சுப்ரமணியின் தற்கொலை குறித்து அவரது மனைவி மற்றும் மகனிடம் மோகனூர் காவல் ஆய்வாளர் இளங்கோ விசாரணை நடத்தி வருகிறார்.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நெருங்கிய நண்பர் நாமக்கல்லை சேர்ந்த சுப்பிரமணி காண்ட்ராக்டர் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு சபரீசன் என்ற மகன் உள்ளார்.

கடந்த 7 ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் ஏரளாமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிகிறது.

மேலும் அமைச்சருக்கு நெருக்கமான நண்பர்கள் வீடு அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக அமைச்சரின் நண்பரான சுப்பிரமணி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதில் ஏரளாமான ஆவணங்கள் கைப்பற்றபட்டுள்ளது. இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் சுப்ரமணியை அழைத்து விசாரணை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே பல பெரும் புள்ளிகளுடன் தொடர்பு கொண்ட சுப்ரமணிக்கு தங்கள் பெயர்கள் வெளி வரக்கூடாது என அவர்கள்  நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்து போன சுப்பிரமணி வருத்தத்துடன் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், செவிட்டு ரங்கன் பட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  அதன் ஒரு பகுதியாக சுப்பிரமணியன் மனைவி சுமதி மற்றும் மகன் சபரீசனிடம் மோகனூர் காவல் ஆய்வாளர் இளங்கோ விசாரணை நடத்தி வருகிறார்.

இதனால் சுப்ரமணிக்கு நெருக்கமான பெரும் புள்ளிகள் தங்கள் பெயர்கள் வெளி வந்துவிடுமோ என்ற அச்சத்தில் உள்ளார்களாம்.

PREV
click me!

Recommended Stories

100 கி.மீ. வேகம்.. விளம்பர பலகையில் பைக் மோதி பயங்கர விபத்து.. தலை துண்டாகி துடித்த மருத்துவ மாணவர்கள்
டெல்லியை குளிர்விக்க அறிக்கை விடுவதா..? எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பகிரங்க சவால்..!