
முகநூல் கள்ளக்காதல் விவகாரத்தில் ஆசிரியை நிவேதிதாவை கார் ஏற்றி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட தீயணைப்பு படைவீரர் இளையராஜா புழல் சிறையில் கழிவறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தீயணைப்பு துறையில் டிரைவராக இருக்கும், இளையராஜா என்பவருக்கும் நிவேதாவுக்கும், முகநூல் மூலம் நட்பு ஏற்பட்டு, பின்னர் அதுவே காதலாக மாறி உள்ளது.
அதேபோல், முகநூல் மூலம் கணபதி என்பவருக்கும், நிவேதாவுக்கும் ஏற்கனவே நட்பு இருந்திருக்கிறது. கணபதிக்கு பண உதவி செய்யும் அளவுக்கு, நிவேதாவின் நட்பு வளர்ந்துள்ளது.
இந்நிலையில், கணபதியுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்த நிவேதாவை நேரில் பார்த்த இளைய ராஜா, ஆத்திரத்தில் தாம் வந்த காரை நிவேதா மீது ஏற்ற அவர் உயிர் இழந்துள்ளார். இதையடுத்து, இளைய ராஜா, கணபதி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட செய்யப்பட்ட தீயணைப்பு படைவீரர் இளையராஜா கழிவறையில் உள்ள ஜன்னல் கம்பியில் தன கைலியின் மூலம் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஆசிரியை மீது காரை ஏற்றிய இளையராஜா நிவேதிதா உயிருக்கு போராடும்போது ஆம்புலன்ஸ் லேட்டாக வந்தது என்பதற்காக ஆம்புலன்ஸ் கண்ணாடியை உடைத்து தன் கையை உடைத்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.