கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தை உடனே நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்...

 
Published : Dec 11, 2017, 08:23 AM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
கிடப்பில் போடப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தை உடனே நிறைவேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்...

சுருக்கம்

Communist Party of India insists to start a medical college scheme

பெரம்பலூர்

கிடப்பில் போடப்பட்டுள்ள பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வலியுறுத்தப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூர், அரியலூர் மாவட்ட 7-வது மாநாடு நிறைவு விழா பெரம்பலூரில் நேற்று நடைப்பெற்றது.

இதற்கு மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.என். துரைராஜூ கொடியேற்றி வைத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.துரைசாமி, வட்டக்குழு உறுப்பினர் அருண்பாண்டியன் ஆகியோர் தலைமைத் தாங்கினர்.

முன்னாள் எம்எல்ஏவும், மாநில செயற்குழு உறுப்பினருமான ஏ. லாசர் தொடக்க உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி. ரமேஷ் அஞ்சலி தீர்மானமும், மாவட்டக்குழு செயலர் இரா. மணிவேல், அரசியல், ஸ்தாபன வேலை அறிக்கையும் சமர்ப்பித்தனர்.

இந்த மாநாட்டில், "கிடப்பில் போடப்பட்டுள்ள பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி திட்டம், செயங்கொண்டம் நிலக்கரி மின்சாரத் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்.

வேளாண்மை உற்பத்தி பொருள்களை அடிப்படையாகக் கொண்டு பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை தொடங்க வேண்டும்.

கல்லுடைக்கும் தொழிலை முறைப்படுத்தி, தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு, குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும்.

சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை அமைக்க வேண்டும்.

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் படுக்கை வசதி, போதுமான மருத்துவர்களை நியமித்து மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.

எறையூர் சர்க்கரை ஆலையை நவீனப்படுத்தும் பணி, இணை மின் திட்டப்பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

திருட்டு, கொலை, கொள்ளை, சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த கூடுதலாக காவல் நிலையங்களும், காவலர்களும் நியமிக்க வேண்டும்.

பெரம்பலூர் - அரியலூர் - ஆத்தூர் இரயில் பாதை இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்.

பருத்திக்கு பூச்சிக்கொல்லி தெளித்தபோது உயிரிழந்த விவசாய தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா ரூ. 10 இலட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில், பெரம்பலூர், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டிற்கு வருகைத் தந்தவர்களை வரவேற்புக்குழுத் தலைவர் என்.செல்லதுரை வரவேற்றார். மாநாட்டில் இறுதியில் பொருளாளர் ஆர். முருகேசன் நன்றித்  தெரிவித்தார்.

PREV
click me!

Recommended Stories

தவெக கூட்டத்தில் உணவு கிடையாது.. தண்ணீர் பாட்டில் மட்டும்தான்.. செங்கோட்டையன் விளக்கம்
தொடர் விடுமுறை.. சொந்த ஊர் போறீங்களா?.. போக்குவரத்துக்கழகம் சொன்ன குட்நியூஸ்..!