
சென்னையில் மாணவர்கள் கத்தியுடன் சுற்றி வருவது அண்மை காலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை திருவல்லிக்கேணி ரயில் நிலையத்தில், மாணவர்கள் கத்தியுடன் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரிதும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இரு தினங்களுக்கு முன்பு சென்னை, திருவல்லிக்கேணி ரயில் நிலையத்திற்கு, பச்சையப்பா கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வந்துள்ளனர். ரயில் நிலையத்தில் மாணவர்கள் கிண்டலாக பேசிக் கொண்டும், அருகில் இருப்பவர்களுக்கு தொந்தரவளிக்கும் வகையில் அவர்களின் நடத்தை இருந்தது.
பின்னர் ரயில் புறப்படும் நேரத்தில் அந்த மாணவர்கள் ரயிலுக்குள் ஏறினர்.
ரயில் சில மாணவர்களின் கைகளில் கத்தி வைத்திருந்தனர். இதனைப் பார்த்த பயணிகள் பயத்துடனே இருந்தனர்.
ரயிலில் மற்ற பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் வகையில் இருந்தது மாணவர்களின் நடவடிக்கை, நெமிலிச்சேரி ரயில் நிலையத்திற்கு ரயில் சென்றபோது, மாணவர்கள் தங்கள் கையில் இருந்த கத்தியைக் கொண்டு நடைமேடையில் உரசிக் கொண்டு பயணித்தது அங்கிருப்பவர்களை அச்சப்பட வைத்தது.
ரயிலில் மாணவர்கள் கத்தி வைத்துக் கொண்டு ரயிலில் பயணித்தது குறித்து வீடியோ, இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இது தொடர்பாக சென்னையில் உள்ள பச்சையப்பன் கல்லூரி நிர்வாகத்திடம் சிலர் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், பச்சையப்பன் கல்லூரி முதல்வர் கூறும்போது, ரயிலில் கத்தியுடன் சென்றவர்கள் தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் என்பது உறுதியானால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரியை விட்டு நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறினார்.
தேவைப்பட்டால் கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்தார். ரயிலில் கத்தியுடன் சென்ற மாணவர்கள், எந்த கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றிரவு, சென்னை மயிலாப்பூரில் வண்டலூரில் உள்ள கல்லூரியில் பயிலும் மாணவர்கள் காரில் கத்தியுடன் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். சூளையில் உள்ள ராட்லர் தெருவில் மாநகராட்சி மகளிர் பள்ளி உள்ளது. பள்ளி முடிந்து மாணவிகள் வீட்டுக்கு புறப்பட்டு செல்லும்போது இரு சக்கர
வாகனத்தில் வரும் மாணவர்கள் அவர்களைக் கேலி செய்வது வருகின்றனர். தங்கள் கைகளில் கத்தியுடனும் அவர்கள் சுற்றி வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளியில் பயிலும் மாணவிகளின் பெற்றோர் புகார் கூறியுள்ளனர்.
சினிமாவில் வரக்கூடிய ஹீரோயிசத்தால் கவரப்பட்டு, விளையாட்டாக இவர்கள் செய்யும் சில காரியங்கள் விபரீதத்தில் முடியும் என்பதை இவர்கள் உணருவதில்லை என்பது வேதனையான விஷயமே!