சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது – போலீஸ் அதிரடி

Asianet News Tamil  
Published : Oct 20, 2016, 02:46 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது – போலீஸ் அதிரடி

சுருக்கம்

வேலூர் அருகே தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் காட்பாடி, விருதம்பட்டு, சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் நகை பறிப்பு சம்பவங்கள் நடைபெறுவதாக காவல்நிலையங்களில் தொடர் புகார்கள் வந்தன.

இதையடுத்து, காவல்துறையினர் தனிப்படை அமைத்து சங்கிலி பறிப்பு கொள்ளையர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் விருதம்பட்டை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் விஜய், தனுஷ் , பிரவீன் , மற்றும் ஜெயக்குமார் ஆகியோரிடம், போலீசார் மேற்கொண்ட விசாரணையில், 4 பேரும் நகை கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து விஜய், தனுஷ், பிரவீன், ஜெயக்குமார் ஆகிய 4 பேரையும் காட்பாடி போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 32½ சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இந்த 4  பேரிடமும்  விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

அமைச்சர் நேருவை விடாது துரத்தும் ED..! லஞ்சப்புகாரில் நடவடிக்கை எடுக்க 3வது முறையாக கடிதம்
கடந்த ஆண்டு பொங்கலுக்கு ரூ.710 கோடி.. இந்த ஆண்டு மது விற்பனை எத்தனை கோடி தெரியுமா? வெளியான தகவல்