கர்ப்பிணி பெண்ணுக்காக ரிவர்சில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்! – ரயில்வே துறையின் மனித நேயம்

 
Published : Oct 20, 2016, 02:45 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
கர்ப்பிணி பெண்ணுக்காக ரிவர்சில் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில்! – ரயில்வே துறையின் மனித நேயம்

சுருக்கம்

ரயிலில் பயணம் செய்த கர்ப்பிணிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சேர்ப்பதற்காக திருவாரூரில் இருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள குளிக்கரை ரயில் நிலையத்துக்கு, எக்ஸ்பிரஸ் ரயில் ரிவர்சில் கொண்டு செல்லப்பட்டது.

காவரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நேற்று முன்தினம் முதல் 48 மணிநேரம் ரயில மறியல் போராட்டத்தை விவசாய சங்கத்தினர் செய்தனர். இதற்கு, திமுக, மதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்பட பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டன.

இந்நிலையில், நேற்று முன்தினம் திருவாரூர் மாவட்டத்தில் காரைக்காலில் இருந்து திருச்சி நோக்கிச் சென்ற ரயிலை காலை 8.20 மணியளவில் குளிக்கரையை அடுத்த சிராங்குடி பகுதி இருப்புப் பாதையில் திமுக மாவட்டச் செயலர் பூண்டி கலைவாணன் தலைமையிலான போராட்டக்குழுவினர் நிறுத்தி மறியலில் ஈடுபட்டனர்.
இந்த ரயிலில் நாகை மாவட்டம், கீழ்வேளூர் வண்டலூரை சேர்ந்த சுதர்சனன் என்பவரது மனைவி ஜெயக்கொடி (22) பயணம் செய்தார். 9 மாத கர்ப்பிணியான இவர், வளைகாப்பு முடிந்து தஞ்சாவூரிலுள்ள தாய் வீட்டுக்கு, ரயிலில் பணம் செய்து கொண்டிருந்தார்.

விவசாயிகளின் மறியல் போராட்டத்தால் எக்ஸ்பிரஸ் ரயில் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சுமார்  11 மணயளபிவல் ஜெயக்கொடிக்கு, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், உறவினகர்கள் அதிர்ச்சியடைந்தனர். ரயில் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து எவ்வித போக்குவரத்து வசதியும் இல்லை.

இதையடுத்து, ரயில் பயணிகள் சிலர், ரயில் டிரைவர் மற்றும் கார்டு ஆகியோரை அணுகி கர்ப்பிணி பெண் பாதிக்கப்பட்ட தகவலை தெரிவித்தனர். உடனடியாக ரயில் டிரைவர், உயர் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டார். அவர்களது அனுமதியின்பேரில், ரயில் கடந்து வந்த 2 கி.மீ. தொலைவில் உள்ள குளிக்கரை ரயில் நிலையத்துக்கு ரிவர்சில் கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டார்.

குளிக்கரை ரயில் நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்திவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குளிக்கரை ரயில் நிலையத்துக்கு இதுதொடர்பான தகவலை அளித்து ரயில் பின்னோக்கி செலுத்தப்பட்டு, ரயில் நிலையத்தை சென்றடைந்தது.

அங்கு சென்றதும், கர்ப்பிணியான ஜெயக்கொடியை, ரயிலில் இருந்து இறக்கி, தயாராக இருந்த ஆம்புலன்ஸ் மூலம், குளிக்கரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். 3 மணி நேர சிகிச்சைக்குப் பிறகு அவர் வீடு திரும்பினார்.
ரயில்வே என்பது நெறிமுறைக்கு உள்பட்டே இருக்கும். இந்நிலையில் அவசரம் கருதி, கர்ப்பிணிப் பெண்ணுக்காக 2 கி.மீ. தொலைவுக்கு ரயிலை ரிவர்சில் இயக்குவதற்கு ரயில் டிரைவர், பாதுகாப்பாளர் மற்றும் ரயில்வே உயர் அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டுக்குரியது என பொதுமக்கள் கூறினர்.

PREV
click me!

Recommended Stories

வெயிட் அண்ட் சீ.. சுட்டெரித்த வெயில்.. மழை குறித்து வானிலை மையம் கொடுத்த முக்கிய அப்டேட்.!
100 நாள் வேலையில் முதலில் காந்தி பெயரையே வைக்கவில்லை.. தனி உலகில் வாழும் ஸ்டாலின்.. அண்ணாமலை அட்டாக்!