வரி செலுத்தாத 10 கடைகளுக்கு சீல் : வருவாய் துறை அதிரடி

 
Published : Oct 20, 2016, 02:21 AM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
வரி செலுத்தாத 10 கடைகளுக்கு சீல் : வருவாய் துறை அதிரடி

சுருக்கம்

சென்னை, எழும்பூர் பகுதியில் வரி  மற்றும் உரிமம் இல்லாமல் இயங்கி வந்த கடைகளை  வருவாய் துறை மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

சென்னை, எழும்பூர் பகுதியில் வருவாய் துறை மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். அப்போது, ஆய்வின்போது முறையாக வரி செலுத்தாமலும், உரிமம் இல்லாமலும் இயங்கி வந்த கடைகளை அவர்கள் கண்டறிந்தனர். மேலும் உரிமமே பெறாத கடைகளையும் வருவாய் துறை மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து, மேற்கண்ட 10 கடைகளை வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைக்க முயன்றனர். அப்போது, வியாபாரிகள் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார துறை அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரத்திற்குப் பிறகு, மேற்கண்ட 10 கடைகளுக்கு அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். இந்த கடைகள் வரி செலுத்தாததால், சென்னை மாநகராட்சிக்கு ரூ.1.5 கோடி அளவுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

PREV
click me!

Recommended Stories

சுடச்சுட ரெடியாகும் திமுக தேர்தல் வாக்குறுதிகள்! கனிமொழி தலைமையில் தயாராக போகும் தேர்தல் நாயகன்!
என் உத்தரவை யாரும் மதிக்கலை... பதில் சொல்லியே ஆக வேண்டும்..! நீதிபதி ஜி.ஆர் சாமிநாதன் ஆவேசம்