
தமிழகத்தில் முதல்முறையாக கோவை விமான நிலையத்தில், பயணிகளுக்கு வழிகாட்ட இரண்டு நடமாடும் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. நேற்று நடந்த துவக்க விழா இந்த ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், கோவை மாநகர காவல் ஆணையர் பிரதீப் குமார், கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ரோபோ செயல்பாடு குறித்து பேசிய கோவை விமான நிலைய இயக்குனர்,” விமான நிலையம் வரும் பயணிகளுக்கு உதவுவதற்கு அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு ரோபோக்களும் பயன்படுத்தப்படும் என்றார். அந்த வகையில் ரோபோக்கள், பயணிகளுக்கு தேவையான தகவல்கள், உதவிகள், விமான நிலையத்தில் உள்ள வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை மேற்கொள்ளும் என்று விவரித்தார்.
விமான நிலையத்துக்குள் நடமாடும் ரோபோ, பயணிகளை அணுகி அவர்களின் தேவைகளை கேட்டறியும். அதனுடன் பயணிகள் உதவி மையத்துடன் தொடர்பு கொண்டு பேடுவதற்கு ரோபோ உதவி செய்யும். இந்த ரோபோக்களால் வீடியோ கால் முறையில் உதவியாளருடன் பேசவும் முடியும் என்று தெரிவித்தார்.
தற்போது இந்த ரோபோக்கள் ஆங்கில கட்டளைக்கு மட்டுமே செயல்படும் வகையில் உள்ளது. விரைவில் தமிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளில் செயல்படுத்தப்படும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில், பயணிகளின் கேள்விகளுக்கு ஒலி வடிவிலான பதில்களை தரும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் கூறினார். ரோபோக்களை இயக்கி வைத்து பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன் , "கோவை விமான நிலையம் பல்வேறு வகைகளில் மேம்படுத்தப்பட்ட வருகிறது. விரைவில் நிலத்தை கையகப்படுத்தும் பணி முடிவடைந்து, விரிவாக்கப் பணிகள் தொடங்க உள்ளன,'' என்றார்.
மேலும் படிக்க: விரைவில் உயர்கிறது ஆட்டோ கட்டணம்.. அரசுக்கு பரிந்துரைத்த குழு.. எவ்வளவு தெரியுமா..?