விரைவில் உயர்கிறது ஆட்டோ கட்டணம்.. அரசுக்கு பரிந்துரைத்த குழு.. எவ்வளவு தெரியுமா..?

Published : Jun 10, 2022, 03:41 PM ISTUpdated : Jun 10, 2022, 03:43 PM IST
விரைவில் உயர்கிறது ஆட்டோ கட்டணம்.. அரசுக்கு பரிந்துரைத்த குழு.. எவ்வளவு தெரியுமா..?

சுருக்கம்

தமிழகத்தில் ஆட்டோகளுக்கான கட்டணத்தை மறுவரையறை செய்து, அலோசனை குழு உயர்த்தப்பட்ட கட்டண பட்டியலை அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 1.5 கி.மீட்டருக்குள்ளான துாரத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 40 யும், கூடுதலான ஒவ்வொரு கி.மீ.க்கும் 18 ரூபாயாகவும் உயர்த்தலாம் என பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆட்டோகளுக்கான கட்டணத்தை மறுவரையறை செய்து, அலோசனை குழு உயர்த்தப்பட்ட கட்டண பட்டியலை அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 1.5 கி.மீட்டருக்குள்ளான துாரத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 40 யும், கூடுதலான ஒவ்வொரு கி.மீ.க்கும் 18 ரூபாயாகவும் உயர்த்தலாம் என பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.  

தமிழகத்தில் ஆட்டோகளுக்கான கட்டணத்தை மறுவரையறை செய்து, அலோசனை குழு உயர்த்தப்பட்ட கட்டண பட்டியலை அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 1.5 கி.மீட்டருக்குள்ளான துாரத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 40 யும், கூடுதலான ஒவ்வொரு கி.மீ.க்கும் 18 ரூபாயாகவும் உயர்த்தலாம் என பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு முன் வாடகை ஆட்டோக்களுக்கான கட்டணத்தை அரசு நிர்ணயித்தது. அதன்படி ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணத்தை 25 ரூபாயாக நிர்ணயம் செய்யபட்டது. மேலும் அத்துடன் கூடுதலாக பயணிக்கும் ஒவ்வொரு கி.மீ.க்கும் 12 ரூபாய் கட்டணம் என்று இருந்தது  மேலும் காத்திருப்பு கட்டணம் ஐந்து நிமிடத்துக்கு 3.50 ரூபாயாகவும் இரவு 11:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை 50 சதவீத கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது.

அதன்பின் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் அரசின் பரிந்துரையை ஆட்டோ ஓட்டுனர்கள் தற்போது கடைபிடிப்பத்தில்லை எனும் குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதே நேரத்தில் 'ஓலா உபர்' உள்ளிட்ட தனியார் செயலி நிறுவனங்கள் ஆதிக்கத்தால் ஆட்டோ ஓட்டுனர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய சூழலில் 80 சதவீதத்துக்கும் அதிகமான ஆட்டோக்கள் செயலி நிறுவனங்களுடன் இணைந்துள்ளன. 

இந்நிலையில் தமிழக அரசே ஆட்டோக்களுக்கான செயலியை வடிவமைத்து 'டிஜிட்டல் மீட்டர்'களை வழங்கி கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்றும் தனியார் செயலிகளை விட குறைந்த கமிஷன் பெற்று அதன் ஒரு பகுதியை நல வாரியத்தின் வாயிலாக ஓட்டுனர்களுக்கு வழங்க வேண்டும் என்றும் ஆட்டோ சங்கத்தினர் போக்குவரத்து ஆணையரிடம் கோரிக்கை வைத்தனர்.  இதற்கிடையில் ஆட்டோகளுக்கானமறுசீரமைத்த கட்டணத்தை மக்களுக்கு தெரிவிக்கும்படி உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது.

இதையடுத்து ஆட்டோ தொழிற் சங்கத்தினர் மற்றும் நுகர்வோர் சங்கத்தினரிடம் கட்டணத்தை மறுவரையரை செய்யவது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் இரண்டு கட்ட ஆலோசனை நடத்தினர். இந்நிலையில்  ஆலோசனையின் முடிவில் உயர்த்தப்பட்ட கட்டண பட்டியலை அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி 1.5 கி.மீட்டருக்குள்ளான துாரத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ. 40 யும், கூடுதலான ஒவ்வொரு கி.மீ.க்கும் 18 ரூபாயாகவும் உயர்த்தலாம் என பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு அறிவியல் முறையிலான கட்டணத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்றும் அனைத்து ஆட்டோக்களுக்கும் டிஜிட்டல் மீட்டர்களை வழங்க வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க: ஒலிம்பியாட் செஸ் தொடர் ; ரூ.8 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் மாமல்லபுரம்!!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ராமஜெயம் கொலை வழக்கில் எதிர்பாராத ட்விஸ்ட்! பிளான் போட்ட இடம் இதுதானா? குற்றவாளியை நெருங்கும் வருண் குமார்?
ஷாக்கிங் நியூஸ்! பயங்கர சத்தத்துடன் ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து! அலறிய குடும்பத்தினர் நிலை என்ன?