ஒலிம்பியாட் செஸ் தொடர் ; ரூ.8 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் மாமல்லபுரம்!!

Published : Jun 10, 2022, 02:32 PM IST
ஒலிம்பியாட் செஸ் தொடர் ; ரூ.8 கோடி மதிப்பில் மேம்படுத்தப்படும் மாமல்லபுரம்!!

சுருக்கம்

மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி நடக்கவுள்ளதால், அதன் சுற்றவட்டாரப்பகுதிகளை சர்வதேச தரத்தில் மேம்படுத்துவதற்காக, 8 கோடி ரூபாய் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.  

பாரம்பரிய சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில், கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட கி.பி.7-8ம் நூற்றாண்டு பல்லவர் கால சிற்பங்கள் உள்ளன. கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த நிகழ்வு சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. இந்த சந்திப்பிற்காக சிற்ப பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் புதுப்பிக்கப்பட்டன. தெருவிளக்குகள் நவீன எல்இடி விளக்குககளாக மாற்றப்பட்டன. சாலையோர சுவர்களுக்கு வண்ணம் தீட்டப்பட்டு மெருகூட்டப்பட்டன. ஆனால், அந்த சந்திப்பு முடிந்த கையோடு சில மாதங்களில் மாமல்லபுரம் மீண்டும் பொழிவிழந்து பழைய நிலைக்கே மாறியது.

இந்நிலையில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, அடுத்த மாதம் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி மாமல்லபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளை மீண்டும் மேம்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மேம்பாட்டு பணிகளுக்காக சுமார் ரூ.8 கோடி நிதி ஒதுக்கி பேரூராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் அறிவித்துள்ளது.

மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் சாலை பகுதி குறுக்கு தெருக்கள், பூஞ்சேரி, வெண்புருஷம் மீனவர் பகுதி சாலைகள், ஒற்றைவாடைத் தெரு, வடக்கு மாமல்லபுரம் பகுதி சாலைகள் மேம்படுத்தப்பட உள்ளன. கிழக்கு கடற்கரை சாலை, பழைய பகிங்ஹாம் பாலம் சாலை, அரசு மருத்துவமனை சாலை, மேம்படுத்தப்பட உள்ளது. மாமல்லபுரம் புறவழி சந்திப்பு பகுதி, பொய்கை குளம் புதுப்பிக்கப்பட உள்ளது.

மாமல்லபுரம் சுற்றுவட்டாரப்பகுதிளில் முக்கிய இடங்களில் புதிய மற்றும் அலங்கார மின் விளக்குகள் அமைப்பட்ட உள்ளன. தேவையான இடங்களில் குப்பை தொட்டிகள், கடற்கரை கோவில் அருகே புதிய குளியலறை, கழிப்பறை அமைக்கப்பட உள்ளது. மாமல்லபுரத்தின் அனைத்து பகுதிகளிலும் தெருப்பெயர் பலகைகள் மாற்றப்பட்டு புதிதாக அமைக்கப்பட உள்ளது. அனைத்து சாலை பகுதிகளின் சுவர்களில் 38 லட்சம் மதிப்பில் வண்ணம் தீட்டி விழிப்புணர்வு வாசகத்துடன் கூடிய ஓவியம் வரைய்யப்பட உள்ளது. முக்கிய இடங்களில் கண்கவர் பூங்கா அமைக்கப்பட உள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஷாக்கிங் நியூஸ்! பயங்கர சத்தத்துடன் ஃபிரிட்ஜ் வெடித்து தீ விபத்து! அலறிய குடும்பத்தினர் நிலை என்ன?
புது ட்விஸ்ட்..! விஜய் கூட்டணிக்கு வருவார்..! எடப்பாடி பழனிசாமி போடும் பக்கா ரூட்..! ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக..!