முதியோர் உதவித்தொகை.. தகுதியில்லாதவர்கள் அதிரடியாக நீக்கம்.. பட்டியல் தயார் செய்யும் அதிகாரிகள்..வெளியான தகவல்

Published : Jun 10, 2022, 01:28 PM IST
முதியோர் உதவித்தொகை.. தகுதியில்லாதவர்கள் அதிரடியாக நீக்கம்.. பட்டியல் தயார் செய்யும் அதிகாரிகள்..வெளியான தகவல்

சுருக்கம்

முதியோர் ஓய்வூதிய திட்டத்தில் கீழ் பலன் பெறும் பயனாளிகளுக்கு சொத்துகள் உள்ளிட்ட வசதிகள் இருப்பின் , முதியோர் உதவிதொகை வழங்கப்படுவது நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டுறவு வங்கிகளில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் பெற்றிருக்கும் முதியோருக்கு, ஓய்வூதியத் தொகை நிறுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

முதியோர் உதவித்தொகை:

தமிழகத்தில் உணவு வழியின்றி உறவினர்கள் ஆதரவின்றி தவிக்கும் முதியோர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு சார்பில் மாதந்தோறும் நிதியுதவி அளிக்கப்படுகிறது. அந்தவகையில் முதியோர் ஓய்வூதிய திட்டம்  முதல்முறையாக 1962 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது முதியோர்களுக்கு மாதந்தோறும் ரூ.20 வழங்கப்பட்டது. இந்த நிதி படிப்படியாக உயர்த்தப்பட்டு, தற்போது, 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தி.மு.க., ஆட்சி பொறுப்பெற்றிற்கும் நிலையில், தமிழகத்தில் நிதி நிலைமை மிகவும் மோசமடைந்திருப்பதால், அரசு நலத்திட்ட நிதியுதவி பெறும் பயனாளிகள் தகுதியானவர்கள் தானா என்பது குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தகுதியானவர் பட்டியல்:

அதன்படி, முதியோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் ஆதார் எண்ணைக் கொண்டு அவர்கள் பெயரில் சொத்துகள் ஏதும் உள்ளதா, கூட்டுறவு வங்கிகளில் நகைகடன் பெற்றுள்ளார்களா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு, பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகின்றனர். எனவே ஓய்வூதியம் பெறும் முதியோர் பெயரில், ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் இருந்தால், நிதியுதவியை நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசு அதிரடி முடிவு:

இதுக்குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறும் போது, ஓய்வூதிய திட்டத்தின் நோக்கம் என்பதே ஆதரவின்றி, உணவுக்கு வழியில்லாமல் இருப்போருக்கு நிதியுதவி வழங்குவது தான். எனவே இந்த திட்டத்தில் மூலம் பலன் பெறுவர்களுக்கு சொத்துகள் உள்ளிட்ட வசதிகள் இருப்பின் உதவித்தொகை நிறுத்தப்படுகிறது. மேலும் பலருக்கு சொந்தமாக வீடு இருக்கிறது. சிலர், மகன் அல்லது மகள் வீட்டில் வசிக்கின்றனர். வசதியோடு இருப்பவர்களும் நிதியுதவி பெறுவது தெரிய வந்திருப்பதால், நிதியுதவி நிறுத்தப்படுகிறது என்று கூறுகின்றனர்.

மேலும் படிக்க: மாணவர்களே உஷார்!! போலி இ-மெயில்களை நம்ப வேண்டாம்.. அண்ணா பல்கலை. எச்சரிக்கை..

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

விஜய் கட்சியில் சேரும் முக்கிய நடிகர்..! அவர் துணிவு ரொம்ப பிடிக்கும்னு பேட்டி
டிசம்பர் மாதத்தில் மழை எப்படி இருக்கும்? அடுத்தடுத்து உருவாகும் புயல்? டெல்டா வெதர்மேன் முக்கிய தகவல்