ஜவுளி மண்டல திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்த வேண்டும்... பிரதமர் மோடிக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!!

By Narendran SFirst Published Mar 18, 2023, 6:07 PM IST
Highlights

தமிழகத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டல திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

தமிழகத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டல திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்த வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டில் பி.எம். மித்ரா பூங்காவினை அமைத்திட விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரம் கிராமத்தினைத் தேர்வு செய்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இப்பூங்காவின் மூலமாக தமிழகத்தின் தென்மாவட்டங்கள் பெரிதும் பயனடையும். தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்குத் தேவையான நிலங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் முகமையாகச் செயல்படும், தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்) இப்பூங்கா அமையவுள்ள இடத்தில் ஏற்கெனவே 1,052 ஏக்கர் நிலத்தினை தன்வசம் வைத்துள்ளது.

இதையும் படிங்க: சிறுமிகளை பாலியன் வன்கொடுமை செய்த பிஎச்டி பட்டதாரி… கைது செய்தது சிபிஐ!!

அதனால் அந்நிறுவனம் இந்தத் திட்டத்தை உடனடியாக அங்கு செயல்படுத்திடத் தயாராக உள்ளது. தமிழகத்தில் சிப்காட் நிறுவனம் பெரிய தொழில் பூங்காக்களை நிறுவி, தனது திறனை நிரூபித்துள்ளது. தற்போது மாநிலத்தில், 2,890 நிறுவனங்கள் 3,94,785 பணியாளர்களுடன், 38,522 ஏக்கரில் 28 தொழிற்பேட்டைகளை அந்நிறுவனம் நிறுவியுள்ளது. தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்படும் தொழிற் பூங்காக்களில் தொழில் தொடங்கிட விரும்புகிறது. தமிழ்நாட்டில் தனியாரால் மேம்படுத்தப்பட்டுள்ள தொழிற் பூங்காக்கள் குறைந்த அளவிலேயே வெற்றியைக் கண்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசியின் புதிய எண்ணெய் கிணறுகளுக்கு அனுமதி? அமைச்சர் பதில்

பி.எம். மித்ரா பூங்காவினை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்தினால், இந்தத் திட்டத்தின் நோக்கங்களை வெற்றிகரமாக அடைந்திட இயலும் என்று தமிழக அரசு உறுதியாக நம்புகிறது. எனவே, இந்தத் திட்டத்தினைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிலங்களை தன்வசம் வைத்துள்ள சிப்காட் நிறுவனம், ஏற்கெனவே பல்வேறு தொழிற் பூங்காக்களை மேம்படுத்தி, செயல்படுத்துவதில் உறுதியான சாதனை நிகழ்த்தியுள்ளதால், தமிழகத்தில் சிப்காட் நிறுவனத்தின் மூலம், பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்கா (பி.எம். மித்ரா) திட்டத்தினைச் செயல்படுத்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

click me!