டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசியின் புதிய எண்ணெய் கிணறுகளுக்கு அனுமதி? அமைச்சர் பதில்

By Velmurugan sFirst Published Mar 18, 2023, 5:54 PM IST
Highlights

புதிய எண்ணெய் கிணறுகள் அமைக்க ஓஎன்ஜிசி அனுமதி கேட்டாலும் அனுமதி தர வாய்ப்பில்லை என்று திருவாரூரில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் அருகே நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய பாரம்பரிய நெல் மாநாட்டு கழகம் மற்றும் மத்திய பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய தேசிய பாரம்பரிய நெல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  மெய்யநாதன், மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் கிருஷ்ணன், சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள சத்துக்கள் குறித்து அறிவியல் பூர்வமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தெரிந்து கொள்ளும் வகையில் மாநாட்டில் ஆய்வு கட்டுரைகளை மாணவர்கள் சமர்பித்தனர். பாரம்பரிய அரிசிகளில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பாரம்பரிய அரிசியை ஏற்றுமதி செய்யும் வகையில் அதற்கான பாரம்பரிய நெல் ரகங்களின் முக்கியத்துவம் குறித்தும் மாநாட்டில் எடுத்துரைக்கப்பட்டது.

தஞ்சையில் பயங்கரம்; சிறுமிகளை வைத்து ஆபாச படம் எடுத்து வெளிநாடுகளுக்கு விற்பனை

இந்த மாநாட்டினைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்  மெய்யநாதன், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் ஓஎன்ஜிசி அதிகாரிகள் புதிய எண்ணெய் கிணறு அமைக்க தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கேட்டு உள்ளனர். ஆனால், காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருந்து வருகிறது. இந்த மாவட்டங்களை முதலமைச்சர் கண்ணை இமைக் காப்பது போல காத்து வருகிறார். ஓஎன்ஜிசி புதிய எண்ணெய் கிணறு  தோண்டுவதற்கு அனுமதி கேட்டாலும் அனுமதி தர வாய்ப்பு இல்லை. குறுங்காடுகள் அரசின் சார்பில் அமைக்கப்படும். ஆண்டு ஒன்றுக்கு பத்து கோடி மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

click me!