நாளை விழுப்புரம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்!!

Published : Apr 25, 2023, 09:42 PM IST
நாளை விழுப்புரம் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்!!

சுருக்கம்

களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஏப்.26) விழுப்புரம் செல்கிறார். 

களஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி வைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (ஏப்.26) விழுப்புரம் செல்கிறார். நாளை விழுப்புரம் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், நாளை மற்றும் நாளை மறுநாள் (ஏப்.27) இரண்டு நாட்கள் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்கிறார். 

இதையும் படிங்க: விஏஓ கொலை செய்யப்பட்ட விவகாரம்... திமுக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

இந்த கூட்டத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கான அரசின் திட்டங்கள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், நகர்ப்புற வளர்ச்சி, சாலை மேம்பாடு, இளைஞர் திறன் மேம்பாடு, கல்வி, மருத்துவம், குழந்தைகள் மற்றும் மாணவர்கள் நலன் குறித்து அரசு அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதையும் படிங்க: பூசி மெழுகப் பார்க்கும் கையாலாகாத அரசு... விஏஓ லூர்து மரணம் குறித்து அண்ணாமலை ஆவேசம்

இதனிடையே முதல்வர் வருகையை முன்னிட்டு அப்பகுதியில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நாளை மறுநாள் (ஏப்.27)  மாவட்ட ஆட்சியர்கள், பிறதுறை மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு வளர்ச்சிப்பணிகள் குறித்து கேட்டறிய உள்ளார். தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள், வியாபாரிகள், அரிசி ஆலை உரிமையாளர்கள் உள்ளிட்டவர்கள் முதலமைச்சரை சந்திக்கவும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவர்களின் கோரிக்கை, குறைகள் தொடர்பாகவும் கேட்டறிய உள்ளார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

வ.உ.சிக்கு திமுக என்ன செய்தது.. எத்தனை இடத்தில் பெயர் வைத்தது? திருச்சி சிவாவுக்கு வ.உ.சி பேத்தி அதிரடி கேள்வி
கலைஞருக்கு பாரத ரத்னா விருது வேண்டும்.. மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் கோரிக்கை