திடீர் விசிட் சென்ற முதலமைச்சர்.. பணியில் இல்லாமல் இருந்த அதிகாரி சஸ்பெண்ட்.. அடுத்து நடந்தது என்ன..?

Published : Jun 30, 2022, 12:02 PM IST
திடீர் விசிட் சென்ற முதலமைச்சர்.. பணியில் இல்லாமல் இருந்த அதிகாரி சஸ்பெண்ட்.. அடுத்து நடந்தது என்ன..?

சுருக்கம்

ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் நல மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்த போது, அப்போது பணியில் இல்லாத குழந்தைகள் நல மைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.  

ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூட்ரோட்டில் உள்ள அரசு குழந்தைகள் நல மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்த போது, அப்போது பணியில் இல்லாத குழந்தைகள் நல மைய அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.ராணிப்பேட்டையில் பாரதி நகர் பகுதியில் ரூ.118.40 கோடி மதிப்பில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். இதனைதொடர்ந்து ராணிப்பேட்டை அரசு நடுநிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், அங்கு மாணவர்களிடம் சிறிது நேரம் கலந்துரையாடினார். 

மேலும் படிக்க:காவல்துறையில் 3 ஆயிரம் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு.. தேதி இன்று அறிவிப்பு.. விண்ணபிப்பது எப்படி ..?

மேலும் படிக்க:அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கு.. ஓபிஎஸ்க்கு அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்றம்..!

மேலும் படிக்க:இபிஎஸ் பிடிவாதத்தால் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியாத அதிமுக..? அதிர்ச்சியில் நிர்வாகிகள்

பின்னர் அங்கிருந்து சென்ற முதலமைச்சர், ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள அரசு ஆதரவற்ற குழந்தைகள் நல விடுதிக்கு சென்று திடீரென ஆய்வு செய்தார். அங்கிருந்த மாணவர்களிடம் பாடங்கள் நடத்தப்படும் முறை குறித்தும், வழங்கப்படும் உணவின் தரம்  குறித்தும் கேட்டறிந்தார். 

மேலும் ஆசிரியர்களிடம், மாணவர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும், மாணவர்களை உயர்கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அப்போது அங்கு குழந்தைகள் நல விடுதி கண்காணிப்பாளர் பணியில் இல்லாமல் இருந்துள்ளார். 

இதனையடுத்து அவரை  உடனடியாக பணியிடை நீக்கம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். பின்னர், இல்லத்தில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்களை கேட்டறிந்த அவர், ஆய்வின் பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலவலர்கள் மீது விளக்கம் கோரி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.  இதுக்குறித்து உரிய விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியருக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

PREV
click me!

Recommended Stories

அடுத்த 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்? வெளியான முக்கிய அப்டேட்
பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!