நச்சுன்னு ஒரு அரசாணை…! சத்துணவு பணியாளர்களை கைவிடாத முதல்வர் ஸ்டாலின்…!

Published : Oct 08, 2021, 08:56 PM IST
நச்சுன்னு ஒரு அரசாணை…! சத்துணவு பணியாளர்களை கைவிடாத முதல்வர் ஸ்டாலின்…!

சுருக்கம்

சத்துணவு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

சென்னை: சத்துணவு பணியாளர்கள் ஓய்வு பெறும் வயதை 58ல் இருந்து 60 ஆக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

இது குறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் முதலமைச்சரால் சட்டமன்ற பேரவை விதி எண் 110ன் கீழ் 07.09.2021 அன்று ஏனையவற்றுக்கிடையே சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வு பெறும் வயது 58ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும்.

இதன் மூலம் தற்போது பணியில் இருக்கும் 29, 137 சமையலர்கள், 24,576 சமையல் உதவியாளர்களும் பயன் பெறுவார்கள் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

சட்டமன்ற பேரவை விதி 110ன் கீழ் முதல்வர் வெளியிட்ட அறிவிப்பின் அடிப்படையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துணவு மையங்களில் பணிபுரிந்து வரும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களின் வயது முதிர்வில் ஓய்வு பெறும் வயதினை(retirement age on superannuation) 58ல் இருந்து 60(completion of 60 years) ஆக உயர்த்தி இன்று ஆணை வெளியிடப்பட்டது.

இவ்வாணையினால் சத்துணவு மையங்களில் பணிபுரியும் 29,317 சமையலர்களும் மற்றும் 24,576 சமையல் உதவியாளர்களும் பயன் அடைவர். சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஊக்கமுடன் பணியாற்றி செம்மாந்த முறையில் இத்திட்டத்தினை செயல்படுத்திட இவ்வரசாணை வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 

PREV
click me!

Recommended Stories

அதிமுக மாஜி எம்.எல்.ஏ மகனை தட்டித்தூக்கிய விஜய்..! தளபதி போட்ட 'சைலண்ட்' ஸ்கெட்ச்!
தொடர் விடுமுறை.. சென்னை டூ மதுரை ரூ.4,000 கட்டணம்.. விமானத்துக்கு டஃப் கொடுக்கும் ஆம்னி பேருந்துகள்!