விரைவில் வடகிழக்கு பருவமழை… இன்று முக்கிய ஆலோசனை நடத்தும் ஸ்டாலின்

Published : Sep 24, 2021, 09:03 AM IST
விரைவில் வடகிழக்கு பருவமழை… இன்று முக்கிய ஆலோசனை நடத்தும் ஸ்டாலின்

சுருக்கம்

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் அது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. அதன் முன்னோட்டமாக வளிமண்டல சுழற்சியில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக பல மாவட்டங்களாக கடந்த பல நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது.

இந் நிலையில் வடகிழக்கு பருவமழையின் போது எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடக்கிறது. இதில் தமிழக அமைச்சர்கள், தலைமை செயலாளர், அனைத்து துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

பருவமழையின் போது வெள்ளம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்? அதற்கு முன்னதாக எடுக்கப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட உள்ளது. அனைத்து துறைகளும் எந்த நேரதத்திலும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

PREV
click me!

Recommended Stories

மொத்தமாகப் பணிந்த எடப்பாடி..! பொதுக்குழுவில் இது மட்டும் நடந்தால் அதிமுகவே ஆட்சி அமைக்கும்..! அடித்துச் சொல்லும் ஆர்.எஸ். மணி..!
என்னையா முடக்க பாக்குறீங்க.. அதுஒருபோதும் நடக்காது.. திமுக அரசை அட்டாக் செய்து விஜய் ட்வீட்!