புரட்டியெடுக்கும் கன‌மழை.. 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்! முதல்வர் உத்தரவு!

Published : Oct 21, 2025, 06:16 PM IST
mk stalin

சுருக்கம்

TN Northeast Monsoon: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வேகமெடுத்த நிலையில், 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. பருவமழையையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள மேற்கொண்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.

கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்

இந்த நிலையில், திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவாரூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர், தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய 12 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், 12 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அவர்களை உடனடியாக அந்தந்த மாவட்டத்துக்கு செல்லும்படி உத்தரவிட்டுள்ளார்.

செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம்

எந்தெந்த மாவட்டங்களுக்கு, எந்தெந்த கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் என்பது குறித்து பார்ப்போம்>

1. திருவள்ளுர் கே.பி.கார்த்திகேயன், இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர். எல்காட் நிறுவனம், சென்னை

2. காஞ்சிபுரம் கே.எஸ்.கந்தசாமி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தாட்கோ, சென்னை

3. செங்கல்பட்டு கிரந்தி குமார் பாடி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம், சென்னை

கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை

4. விழுப்புரம் எஸ்.ஏ. இராமன், இ.ஆப., இயக்குநர், தொழிலாளர் நலன், சென்னை

5. கடலூர் டி.மோகன், இ.ஆ.ப., இயக்குநர். சுரங்கம் மற்றும் கனிமவளம், சென்னை

6. மயிலாடுதுறை கவிதா ராமு, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர், கோ ஆப்டெக்ஸ், சென்னை

திருவாரூர், நாகை, தஞ்சாவூர்

7. திருவாரூர் டி. ஆனந்த், இ.ஆ.ப., ஆணையர், ஆதிதிராவிடர் நலம், சென்னை

8. நாகப்பட்டினம் ஏ.அண்ணாதுரை, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சென்னை

9. தஞ்சாவூர் எச். கிருஷ்ணனுன்னி, இ.ஆ.ப., தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம், சென்னை

அரியலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்

10. கள்ளக்குறிச்சி பி. ஸ்ரீ வெங்கடபிரியா, இ.ஆ.ப., செயலாளர், மாநில தேர்தல் ஆணையம், சென்னை.

11. அரியலூர் எம். விஜயலட்சுமி, இ.ஆப., ஆணையர், இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி, சென்னை

12. பெரம்பலூர் எம். இலட்சுமி, இ.ஆ.ப.. ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நலம், சென்னை

சென்னையில் எப்படி?

சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள இந்திய ஆட்சிப் பணி மண்டல அதிகாரிகள் தத்தமது மண்டலங்களில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடு நடவடிக்கைகளை உடனடியாக தொடங்குமாறும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்
வளர்ச்சி அரசியலா..? டேஷ் அரசியலா..? மாமதுரையில் நிகழும் அசாதாரண சூழல்.. முதல்வர் பரபரப்பு