எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்! தயாராக இருங்க! எடப்பாடி பழனிசாமி அலர்ட்!

Published : Oct 21, 2025, 04:07 PM IST
edappadi Palanisamy

சுருக்கம்

தமிழகத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக பல மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கனமழை பெய்யும் என்பதால், திமுக அரசு போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவழை தொடங்கியதில் இருந்து பரவலாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் 20 செ.மீ.க்கு அதிகமாக மழைப் பொழிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை அதிகமாகும் வாய்ப்பு உள்ளதால், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளரும் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தலைநகர் சென்னை உள்ளிட்ட வடக் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கையினை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதில், 8 மாவட்டங்களுக்கு இன்றும், 4 மாவட்டங்களுக்கு நாளையும் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மழை அதிகமாகும் வாய்ப்பு உள்ளதால், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன். பொதுமக்கள் அனைவரும் வானிலை ஆய்வு மையம் அறிவிப்புகளின் அடிப்படையில், பாதுகாப்போடு இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.பொதுமக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள அதிமுக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகள் தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமித்ஷா, மோடி ஒன்னு கூடி வந்தாலும் காவி நுழைய முடியாது..! திமுகவுக்காக மீண்டும் குதித்த "ஊத்தி கொடுத்த".. கோவன்
இன்னும் மழையின் ஆட்டம் முடியல! வானிலை மையம் எச்சரிக்கையும்! டெல்டா வெதர்மேனின் அப்டேட்டும்