தஞ்சையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் கும்பத்தினருக்கு நிதியுதவி... அறிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!!

தஞ்சை அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் கும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி அறிவித்துள்ளார். 


தஞ்சை அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் கும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவி அறிவித்துள்ளார். தஞ்சை அருகே பரிசுத்தம் நகரைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவர் கடந்த 3 ஆம் தேதி பள்ளியேறி கிராமத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான வயல் வழியாக சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அங்கு அறிந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், அவர் மின்சாரம் தாக்கி இளங்கோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த நிலையில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முதல்வரின் புகைப்பட கண்காட்சியை பார்த்துவிட்டு மைதானத்திலேயே நோன்பு திறந்த இஸ்லாமியர்கள்

Latest Videos

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் வட்டம், மேலவெளி கிராமம், பரிசுத்தம் நகரைச் சேர்ந்த இளங்கோவன் என்பவர் கடந்த 3.4.2023 அன்று பள்ளியேறி கிராமத்திலுள்ள தனியாருக்கு சொந்தமான வயல் வழியாக சென்றுகொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக அங்கு மின்கம்பி மூலம் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்த இளங்கோவனின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் விவகாரம்... பேராசிரியர் ஹரிபத்மனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

click me!