2023 ஆம் ஆண்டு டான்செட் தேர்வுக்கான இறுதி விடைக் குறிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு டான்செட் தேர்வுக்கான இறுதி விடைக் குறிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் டான்செட் எனப்படும் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை நடத்தி வருகிறது. இந்த தேர்வை அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ ஆகிய முதுகலைப் படிப்புகளில் சேர, மாணவர்கள் எழுதி வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான டான்செட் தேர்வு கடந்த மார்ச் 25 ஆம் தேதி நடைபெற்றது.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு - அரசின் நலத்திட்டங்களை பெற இதை உடனே செய்யுங்க!
இந்த நிலையில் டான்செட் தேர்வுக்கான இறுதி விடைக் குறிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தேர்வர்கள் இ-மெயில் முகவரி, பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு, விடைக் குறிப்பைக் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டான்செட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு அதில் வரும் மதிப்பெண்களின் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தப்பட்டு அதன் மூலம் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான இதற்கிடையே இந்த தேர்வுக்கான முடிவுகள் ஏப்.15 ஆம் தேதிக்குள் வெளியாகும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: மனைவியின் ஆபாச படங்களை வைத்து மிரட்டிய கணவர்; 5 ஆண்டு சிறை - நீதிமன்றம் அதிரடி
அதை தொடர்ந்து ஏப்ரல் அல்லது மே மாதங்களில் கலந்தாய்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு டான்செட் தேர்வு மே 14 ஆம் தேதி நடைபெற்றது. எம்சிஏ படிப்பிற்கு மே.14 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும் எம்பிஏ படிப்பிற்கு மே 14ஆம் தேதி மதியம் 2:30 முதல் மாலை 4:30 மணி வரையும் தேர்வுகள் நடைபெற்றன. மேலும் முதுகலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே 15 அன்று நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.