நுங்கு மார்பகம்.. குளோப் ஜாமூன் புகழ் ஷர்மிகாவுக்கு மீண்டும் சிக்கல்.. வீடியோவை பார்த்த 2 பேர் புகார்

By Raghupati R  |  First Published Apr 11, 2023, 5:04 PM IST

சித்த மருத்துவர் ஷர்மிகாவின் மருத்துவ குறிப்பு வீடியோக்களை பார்த்து, அதன்படி பின்பற்றியதால் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதாக 2 பேர் புகார்களை தெரிவித்துள்ளனர்.


சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ஷர்மிகா, சமூக வலைதளங்களில் சித்த மருத்துவக் குறிப்புகளை தெரிவித்து வந்தார். சமீபத்தில் அவர் அளித்த சில குறிப்புகள், சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஒரு குளோப் ஜாமூன் சாப்பிட்டால் மூன்று கிலோ எடை கூடும். குப்புற படுத்தால் மார்பக புற்றுநோய் வரக்கூடும். தினமும் எட்டு நுங்கு சாப்பிட்டால் மார்பகம் அழகாகும் போன்ற மருத்துவ கருத்துகளை தெரிவித்தார். மனிதர்களை விட பெரிய விலங்குகளான மாடு போன்றவற்றை சாப்பிட்டால் செரிமானம் ஆகாது. அதனால் உடல் பாதிக்கப்படும் என்று சொல்லி மதரீதியான சர்ச்சையையும் கிளப்பினார்.

Tap to resize

Latest Videos

பாஜக டெய்சியின் மகள் என்பது கூடுதல் தகவல். மருத்துவர் ஷர்மிகா, சித்த மருத்துவக் குறிப்பில் இல்லாதவற்றை பேசி வருவதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவரிடம் விளக்கம் கேட்டு, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை நோட்டீஸ் அனுப்பியது. இந்திய மருத்துவ கவுன்சில் முன்பு ஆஜர் ஆகி விளக்கமும் அளித்தார்.

பிறகு ஷர்மிகா ஒரு வீடியோ வெளியிட்டு, தனது சர்ச்சை பேச்சுக்களுக்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் இந்த நிலையில், சித்த மருத்துவர் ஷர்மிகாவின் மருத்துவ குறிப்பு வீடியோக்களை பார்த்து, அதன்படி பின்பற்றியதால் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டதாக 2 பேர் இந்திய மருத்துவ கவுன்சிலில் தனித்தனியாக புகார்கள் கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க..லெஜன்ட் சரவணன் உடன் நடிக்க சென்ற மணிமேகலை... குக் வித் கோமாளியை விட்டு விலகியது இதுக்குத்தானா?

இந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்த இந்திய மருத்துவ கவுன்சில், அவர்களை நேரில் அழைத்து எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என பரிசோதனை செய்ய உள்ளன.  சித்த மருத்துவர் ஷர்மிகா மீது எந்தமாதிரியான நடடிக்கை எடுக்கப்படும் என்று அனைவரிடமும் கேள்வி எழுந்துள்ளது. ஒருபக்கம் எதிர்ப்புகள் கிளம்பினாலும், மற்றொரு பக்கம் இவருக்கு ஆதரவான குரல்களும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க..சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தடை.. அங்க தமிழர்களே இல்லை.!! பாமக கிளப்பிய சர்ச்சை !!

இதையும் படிங்க..நோ சீட்.! பல்டி அடித்த பாஜக தலைவர்.. அண்ணாமலை போட்ட ட்வீட் - கர்நாடக தேர்தலில் அதிரிபுதிரி

click me!