CM MKStalin : சட்ட மன்ற கூட்டத்தொடர் அறிவிப்பு.. முதலமைச்சரின் திடீர் அலோசனை..

Published : Dec 13, 2021, 07:45 PM IST
CM MKStalin : சட்ட மன்ற கூட்டத்தொடர் அறிவிப்பு.. முதலமைச்சரின் திடீர் அலோசனை..

சுருக்கம்

தமிழக பொருளாதார நிலைக்குறித்து முதலமைச்சருடன் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுமான் ராஜன் அலோசனை மேற்கொண்டார்.

முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள,இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் முதலமைச்சரை சந்தித்து பேசினார். மேலும் தமிழகத்தில் பொருளாதார நிலையை மேம்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.

கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருந்ததாகவும் இந்த போக்கை மாற்றி அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறதாகவும் தெரிவிக்கப்பட்டது . இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதையை வகுத்து, அரசுக்கு ஆலோசனை வழங்க, முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் உறுப்பினரான ரகுராம் ராஜன் இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்தார்.

அப்போது பொருளாதார நிலையை வலுபடுத்துவது, நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவது, அதற்கான நிதி ஆதாரம் ஆகியன தொடர்பாக அலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த பொருளாதார அலோசனை குழுவானது, பொருளாதாரம் மற்றும் சமூக கொள்கை, சமூக நீதி மற்றும் மனித வளர்ச்சி தொடர்பான விஷயங்களில் குறிப்பாக பெண்களுக்கான சம வாய்ப்பு, பின்தங்கிய மக்களின் நலன் தொடர்பான தங்களது பொதுவான பரிந்துரைகளை வழங்கும் என்றும், பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் மாநில உற்பத்தி வளர்ச்சியை ஊக்குவிப்பது குறித்தும், மாநிலத்தின் ஒட்டுமொத்த நிதிநிலையை உயர்த்துவது குறித்தும் ஆலோசனை அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அந்த வகையில், கொரோனா பாதிப்பால் தமிழக பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்டவை குறித்து, இதுவரை 2 முறை இந்த குழுவுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, சென்னை தலைமைச் செயலகத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரும், பொருளாதார ஆலோசனைக்குழு உறுப்பினருமான ரகுராம் ராஜன், முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனையில், தமிழகத்தின் பொருளாதார நிலை குறித்தும், பொருளாதார நிலையை அதிகரிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாகவும், நிலுவையில் உள்ள திட்டங்களை செயல்படுத்துவது, அதற்கான நிதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சந்திப்பின் போது, நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலர் இறையன்பு உள்ளிட்ட அரசின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

PREV
click me!

Recommended Stories

TVK VIJAY: விஜய்க்கு முதலமைச்சர் பாதுகாப்பு வாபஸ்.! ஆளுநரின் உத்தரவால் மாறிய அரசியல் களம்!
ஆர்.பி. சவுத்ரி உடலை பார்த்து தேம்பி அழுத விஜய்... ஜீவாவுக்கு ஆறுதல் சொன்ன தளபதி